திரும்பி வருதலும் யூபிலியும் Shreveport, Louisiana, USA 62-1122 1நன்றி சகோதரனே! நீங்கள் அமரலாம். [ஒரு சகோதரன் அந்நியபாஷையில் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம், மற்றொரு சகோதரன் வியாக்கியானம் பண்ணுகிறார் - ஆசி.] ஆமென், ஆமென். தேவனுக்குத் துதியுண்டாவதாக! (ஒரு சகோதரன் அந்நியபாஷையில் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம். மற்றொரு சகோதரன் வியாக்கியானம் பண்ணுகிறார்.] ஆமென். 2இன்றிரவு நான் உங்களிடம் பேசப் போவதற்கு சற்று முன்பாக, நம்மிடம் கூறப்பட்டதைக் கேட்பது என்னே ஒரு சிறந்த காரியமாயிருக்கிறது. அவர் நமக்கு ஒரு புதிய அபிஷேகத்தைக் கொடுப்பார் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அக்காரணத்தினால்தான் நாம் இங்கே கூடியுள்ளோம். அக்காரணத்தினால்தான் இந்தக் கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த சபையுடனும், இந்த ஆராதிக்கிற மக்களுடனும், என்னுடைய அருமையான நண்பர்களுடனும், சகோதரன் மூர் (Brother Moore), அவருடைய அன்பான மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தாருடனும், மற்றும் யூபிலியாகிய (Jubilee) இந்த ஐக்கியத்தின் நேரத்திற்காக ஒன்றுகூடியிருக்கிற கர்த்தருடைய அனைத்துக் குடும்பங்களுடனும் ஒன்று கூடும்படியாக நான் இன்றிரவு இங்கேயிருப்பதை ஒரு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். நாம், தேவனுடைய வார்த்தையை மையமாகக் கொண்டும், மற்றும் அவருடைய பிள்ளைகளுடைய துதியையும் ஆராதனையையும் மையமாகக் கொண்டும் ஒன்று கூடுகிறோம். 3நான் நம்முடைய சகோதரன், 'ஊற்றப்படுதல்' என்பதைக் குறித்து, அதாவது லாஸ்ஏஞ்சலஸ்-ல் (Los Angeles) உள்ள அசூசா வீதியில் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலின் ஆரம்பத்தைக் குறித்து பேசுவதைக் கேட்பதற்கு நான் இங்கே இல்லாதிருந்ததால், நான் நிச்சயமாக ஏதோவொன்றை இழந்தவனாயிருக்கிறேன். அந்தச் செய்தியை பதிவு செய்யும்படி இக்காலையில் நான் ஒலிப்பதிவு செய்யும் நபர் சகோதரன் சாத்மேன்-ஐ (Brother Sothmann) இங்கே முன்னதாக அனுப்பினேன், அதினிமித்தம் அந்தச் செய்தியை பின்னர் என்னால் கேட்க இயலும். அவர் இங்கே எங்கேயோ இருக்கிறார். நாங்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முயற்சித்து, நேற்றிரவு புயலினூடாக காரோட்டி வந்தோம், ஆனால் கூட்டத்தை தவறவிட்டோம். நாங்கள் மிகவும் களைப்படைந்து, பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் இடையில், சற்று நேரம் உறங்கும்படி லிட்டில் ராக் (Little Rock) எனும் இடத்தில் வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆகவே இக்காலையில் நான் சற்று அதிக நேரம் உறங்கிவிட்டேன். எனவே ஒரு வித களைப்பாயுள்ளது, நாங்கள் வெளிநாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகின்ற காரியங்களுக்காக, நாங்கள் மிகவும் அலுவலாயிருந்தோம். ஆகவே சற்றுக் களைப்பாயிருந்தோம். ஆனாலும் அந்த நேரத்தில் இந்த கோத்திரப் பிதாவின் செய்தியைக் கேட்பதில் மகிழ்ச்சியடைவேன் என்று நான் அறிந்திருக்கிறேன். 4ஒரு முறை கனடாவில் நான் சகோதரன் மூர் (Brother Moore) அந்தக் கதையை வாசிப்பதைக் கேட்க சிலாக்கியம் பெற்றவனாக இருந்தேன். அந்த புத்தகம் எங்கே போனது என்று எப்போதும் நான் வியப்படைவதுண்டு. பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலின் ஆரம்பகாலத்தில் அந்த ஜனங்களுடைய கதறல்களைக் குறித்தும், இருதய வலிகளைக் குறித்தும் நான் வாசிக்க விரும்பினேன். அவர்களில் ஒருவர், ஒரு சிறிய குழந்தை அல்லது யாரோ ஒருவரை இழந்தார் என்று நினைக்கிறேன். அதை வைக்க அவர்களுக்கு ஒரு பெட்டி கூட இல்லாதிருந்தது. சில பலகைகளைக் கொண்டு அவர்களே சவப்பெட்டியைச் செய்யும் நிலைக்குச் செல்ல வேண்டியதாயிருந்தது. ஓ என்னே! ஜனங்களால் எவ்வளவாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள்! இருப்பினும், அழிவில்லாத விசுவாசத்தைக் கொண்டு, அது இன்று உருவாக்கியிருக்கின்ற அந்த மகத்தான சபையைக் காண அவர்கள் தொடர்ந்து சென்றனர். விசுவாசம் எதைச் செய்யும் என்பதை அது காண்பிக்கப் போகிறது. விசுவாசமானது நங்கூரமிடப்பட்டிருக்கின்ற ஏதோவொன்றை ஒரு நபர் உடையவராயிருந்து, இருதயத்தில் உறுதியாயிருப்பாரானால், எத்தனை முறை அவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், நின்றுவிட மாட்டார் என்று நினைக்கிறேன், அவர்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். 5நகைச்சுவைத் துணுக்குகளை (comic strips) எழுதமுடியும் என்று நினைத்து அதை எழுத விரும்பின ஒரு மனிதன் அங்கே இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருடைய — அவருடையத் திறமையை ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசியாக ஒரு சபைக்காக அவர் சில சிறிய தலையங்கங்களை (editorials) எழுதத் தொடங்கினார். பின்னர் பட்டறையின் சிறிய பொந்துக்குள்ளே ஒரு சிறிய எலியை கவனித்தவராய் சில கதைகளை எழுத முயற்சித்தார். ஒருவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு செய்தித்தாள்களும் அதைப் புறக்கணித்து, அவருக்கு எந்தத் திறமையும் இல்லை என்று கூறின. இருப்பினும் அவர், தான் செய்ததின் மேல் நம்பிக்கைக் கொண்டவராய் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். அவர் அந்த பட்டறையிலிருந்த ஒரு குறிப்பிட்ட எலியின் விநோதமான காரியத்தை கவனிக்க ஆரம்பித்தார். அங்கே தான் மிக்கிமவுஸ் (Mickey Mouse) என்ற கதை பிறந்தது. மேலும் வால்ட் டிஸ்னி (Walt Disney), அவருடைய கம்பெனி தற்போது லட்சக்கணக்கான டாலர்களை அல்லது எதையெல்லாம் சம்பாதித்திருக்கிறதோ அவையனைத்தும் மதிப்புடையதாயிருக்கிறது. ஏனெனில், ஏதோவொன்று அவருக்குள் துடித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் நம்பினார். 6இயற்கையாக ஒரு மனிதனால் அவ்விதம் செய்யக்கூடுமானால், வேதவசனத்துடன் தரித்திருந்து, அவருடைய சாதனையை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் துடிப்பைப் பெற்றிருக்கிற ஒரு மனிதனைக் குறித்ததான காரியம் எப்படியாயிருக்கும்? இந்த வாரத்தில், என்னுடைய ஆத்துமாவில் ஒரு எழுப்புதலுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், நேற்றைய தினத்தில் ஒரு நற்செய்தியைக் கேட்டவுடன் என் மனைவியினிடத்தில் விரைந்து சென்று, கரங்களை அவளைச் சுற்றிப் போட்டு, “நான் விடுதலையாயிருக்கிறேன்” என்று கூச்சலிட்டு, அறைக்குள் சென்று அழத்துவங்கினேன். நான் அவளிடம், “தேவன் எனக்குள்ளாக ஒரு எழுப்புதலைக் கொடுக்க வேண்டுமென்று நான் — நான் — நான் — நான் விரும்புகிறேன் என்பதை நீ அறிவாயா” என்று கூறினேன். மேலும், “நான் ஐந்து வருடங்களாக ஒரு — ஒரு பெரிய பாரத்தால் நெருக்கப்பட்டிருக்கிறேன், இப்பொழுது விடுதலையாக்கப் பட்டிருக்கிறேன். மேலும்...'' என்றேன். நான், ”ஓ! என்னே , நான் எனக்குள் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஜனங்கள் எனக்காக ஜெபிக்கிறார்கள், நான் சகோ. ஜேக் (Brother Jack) அவர்களிடம் சென்றுகொண்டிருக்கிறேன், அவை அனைத்தையும் பெற்றுக்கொள்வேன், உண்மையாக அது எனக்குத் தேவைப்படுகிறது'' என்று நினைத்தேன். நாம் அனைவரும் முழுமையாக அந்த வழியில் தான் உணருகிறோம். சகோதரி அன்னா ஜீன் (Sister Anna Jeanne), நீங்கள் விசேஷமாக அந்த சிறிய தொப்பியின் பேரில் எழுதின அந்தக் கட்டுரையை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். நான் அதைக் காண விரும்புகிறேன். 7சகோதரி மூர் அவர்களை இங்கே காண்பதில் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தாள் என்று அறிந்தோம். சற்று நேரத்திற்கு முன்பு அவள் இங்கே ஏதோவொன்றைக் குறித்து பேச ஆரம்பித்தாள் என்று பில்லி என்னிடம் கூறினான். அது தேவனுடைய கிருபையின் ஒரு சாட்சி மற்றும் அவருடைய சுகமாக்கும் வல்லமையைப் பற்றியதாயிருந்தது. இந்த வாரத்தில், கர்த்தருக்குச் சித்தமானால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி சில சுகமளிக்கும் ஆராதனைகளை உடையவர்களாய் இருக்க விரும்புகிறோம். ஜெபிப்பதற்காக வருகிற அனைவருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என உத்தேசித்துள்ளோம். தேவன் நமக்கு மற்றுமொரு அசூசா வீதியின் ஊற்றப்படுதலைக் கொடுக்க நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 8ஆகவே இப்பொழுது, நான் இதை அறிந்துள்ளேன்... நேற்றைய தினத்தில் தான் எழுப்புதலானது துவங்கினது, அல்லது கூட்டமானது துவங்கினது என்று நான் நினைத்தேன், ஆனால் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்தே (கூட்டங்கள்) நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன், அவ்விதமே விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை உடையவராயிருக்கிறீர்கள்... ஆகவே நீங்கள் இங்கே மகத்தான பிரசங்கிகளைப் (speakers) பெற்றிருந்தீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். நாம் நிச்சயமாக இன்றிரவு இக்கூட்டம் பெற்றிருக்கிற... அது அடைந்திருக்கின்ற இந்த சூழ்நிலைக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்படிப்பட்டதான ஒரு உட்கிரகிக்கத்தக்கப் பண்புடைய கூட்டத்திற்கு ஏதோவொன்றைச் சொல்ல நினைப்பது மிகவும் கடினமாக இருக்கக் கூடாது. ஏற்கனவே ஆவியானவர் இங்கு இருக்கிறார், எனவே நீங்கள் நேராக அதற்குள் கடந்து செல்லுகிறீர்கள், அதைச் செய்வது மெய்யாகவே ஒரு நல்ல உணர்வாயிருக்கிறது. எப்பொழுதும் பரிசுத்த ஆவியின் அருமையான வரவேற்பை, இங்கேயுள்ள இந்த சபையில் காண்பதற்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 9இப்பொழுது, ஜனங்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள், வெளியேயும் நின்றுக் கொண்டிருக்கிறதான மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் கீழே வரும்பொழுது எங்கும் அவர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் திரும்பிச் செல்கிறதான ஒரு நீண்ட வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவர்கள் மேல் மாடியிலோ, கீழேயோ அல்லது பால்கனியிலோ உள்ளே நுழைய எங்கும் இடமில்லாமல் காணப்பட்டார்கள். ஆகவே நாங்கள் — நாங்கள் இன்றிரவு சிறிது நேரம் பேசி, முடிந்த வரை சீக்கிரமாக முடிக்க முயற்சி செய்யப் போகிறோம். பிறகு நாளைக் காலையில் இக்கூட்டங்களின் ஒரு — ஒரு — ஒரு பகுதி (session) இருக்கிறது, நாளைக் காலையில் என நம்புகிறேன். சகோதரன் ஜேக் (Brother Jack) கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போகிறார். ஆகவே, நீங்கள் அனைவரும் நாளை பிற்பகலில் இங்கே இருக்க விரும்புகிறீர்கள் என நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன். (சகோ. பிரன்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்) நான், “சகோ. ஜேக், அதைக்குறித்து என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் — நான் — நான் பதிலைப் பெற்றிருக்கிறேன். ஆனால், கேள்விகளைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார். ஆகவே கேள்விகளுக்குப் பதிலளிக்கிற பாரம் அவர் மேல் இருக்கிறபடியால் நான் நிச்சயமாகவே மகிழ்ச்சியாயிருக்கிறேன். 10இப்பொழுது, நாம் ஐக்கியத்தினுடைய ஒரு நல்ல நேரத்தைப் பெற்றிருப்பதிலும், பேசுவதிலும், எப்பொழுதும் ஒருவரையொருவர் சந்திக்க விரும்புவதிலும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அதுதான் இதுவாயிருக்கிறது (இக்கூட்டங்கள் - மொழிபெயர்ப்பாளர்). ஆனால் இப்பொழுது, நாளுக்கு நாள், நாம் அனைவரும் முடிவை நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம் என்பதை அறிந்தவர்களாய், இந்தக் காரியங்களின் பயபக்திக்குரிய (sincere) பக்கத்தில் ஒரு சில கணங்கள் நாம் தரித்திருப்போம். நான் இங்கே இந்த பழைய கோத்திரப் பிதாவைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அசூசா வீதியில் அவருடன் ஆராதித்த எத்தனையோ பேர் அந்த நதியை ஏற்கனவே கடந்து விட்டிருக்கிறார்கள். என்றோ ஒரு நாளில் நம்மில் சிலர், கர்த்தர் தாமதிப்பாரானால், நம்மில் அநேகர் அதைக் கடந்தவர்களாய், யூபிலியில் ஷ்ரீவ்போர்டில் (Shreveport) நடந்த கூட்டத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்போம். நாம் அதைச் செய்தாக வேண்டும் என்பதை நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, ஒவ்வொரு முன்னெச்சரிக்கைகளையும் கருத்தில் கொள்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. மீண்டும் முயற்சி செய்யும்படி நாம் திரும்பி வரப்போவதில்லை, இப்பொழுதே நாம் அதைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆகவே நான் ஜனங்களிடம் வரும்பொழுது, ஒருக்காலும் ஜனங்களைப் பிரியப்படுத்த முயற்சி செய்வதில்லை , மேலும் அதில் நான் ஒருபோதும் குற்றவுணர்வாய் இருந்ததில்லை, நான் தேவனைப் பிரியப்படுத்த முயற்சிக்கவே வருகிறேன்.. ஆனால் சில நேரங்களில் நான் பேசும் போது... கிள்ளிவிடுவது போலவோ அல்லது காயப்படுத்துவது போலவோ தோன்றலாம். ஆனால் நான் அவ்விதம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்வதில்லை; நாம் எது சரியோ மற்றும் எது சத்தியமோ அதனோடுத் தரித்து நிற்க வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து அதுவே சரி என்பதை நிரூபிப்பதைக் காணவேண்டும். அதையே நாம் அடைய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது வேத வசனத்தை வாசிப்பதற்கு முன்பாக, ஜெபத்திற்காக நாம் மீண்டும் நம்முடைய தலைகளைத் தாழ்த்த விரும்புகிறேன். 11எங்களுடைய தேவனே, இன்றிரவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய சிங்காசனத்தை நாங்கள் அணுகுகிறோம். உம்முடைய நாமத்தை வெறுமனே கூறுவது கூட எங்களுக்கு ஏதோவொன்றை செய்கிறது, ஏனெனில் அது இன்பமானது. இங்கேயுள்ள இந்த சிறியக் கட்டிடத்திலிருந்து எங்களை உயர்த்தி, கட்டிடத்தின் மேற்புறத்திற்கும் அப்பால் சென்று, சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் அப்பால் உம்முடைய பிரசன்னத்திற்குள் சென்று, உம்முடைய மகத்தான பொற்பலிபீடத்தைச் சுற்றிலும், எங்களுடைய விசுவாசத்தையும், எங்களுடைய விண்ணப்பங்களையும், இயேசுகிறிஸ்துவாகிய எங்களுடைய பலியோடுகூட வைக்க இப்பொழுது நாங்கள் வருகிறோம். “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுகொள்வதெதுவோ அதை நான் அருளுவேன்” என்று அவர் கூறியிருக்கிறார் என்பதை அறிந்தவர்களாய் அவருடைய நாமத்தினாலே நாங்கள் வருகிறோம். மேலும் இப்பொழுது முதலில் நாங்கள் எங்களுடைய பாவங்களையும், எங்களுடைய குற்றங்களையும், எங்கள் எல்லா தவறுகளையும், அறிக்கை செய்ய வருகிறோம். ஓ! கர்த்தாவே அவைகளில் அநேகம் எண்ணற்றவைகளாயிருக்கின்றன. ஆனால் நாங்கள் இரக்கத்திற்காகக் கெஞ்சுகிறோம், கர்த்தாவே! இந்த மகத்தான ஐக்கியத்தின் நேரத்தில் மீண்டும் உம்முடைய ஜனங்கள் மேல், உம்முடைய ஆசீர்வாதங்களின் மகத்தான ஊற்றப்படுதலில், நீர் எங்களிடம் திரும்பும்படியாகக் கேட்கிறோம். நாங்கள் இருள் சூழ்வதையும், நேரமானது நெருங்குவதையும் காண்கையில், நாங்கள் வாழ்கின்ற இந்த மணிநேரத்தில், சபைகள் ஒன்றையொன்று விலகுவதைக் காண்கையில், கர்த்தாவே, எங்களை மீண்டும் ஆவி மற்றும் வார்த்தையைச் சுற்றியதான ஐக்கியத்தின் இணைப்புகளோடு எங்களை மீண்டும் நெருங்கி வரச் செய்யும். 12இன்றிரவு இங்கு வந்ததின் பயனைப் பெறாத எந்தவொரு நபரும் அருகிலோ, இக்கட்டிடத்தின் உள்ளேயோ வெளியேயோ எங்கும் இல்லாதிருப்பார்களாக. அவர்கள் திறந்த இருதயங்களுடன் வந்து, பேசுகிற நாமும் திறந்த மனதுடன் பேசி, பரிசுத்த ஆவியானவர் நம்மை எடுத்து, அவருடைய சித்தத்தை நடப்பிப்பதற்கு, நாம் அனைவரும் பரிசுத்த ஆவிக்கு நம்மை அர்ப்பணித்தவர்களாக இருப்போமாக. இப்பொழுது, நீர் எங்களை சந்திப்பீர் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறோம் என்று எங்கள் இருதயத்தின் ஆழத்தில் உணரச் செய்கின்ற வகையில், ஒரு சில கணங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட அந்த செய்திக்காக நாங்கள் உமக்கு மிகவும் பணிவுடன் நன்றி கூறுகிறோம். ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்ற பிள்ளைகளைப் போல, கர்த்தாவே, நாங்கள் அதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் வாசிக்கின்ற வார்த்தைகளை ஆசீர்வதியும். பேசுகிற சத்தத்தையும், கேட்கிற செவிகளையும் பரிசுத்தப்படுத்தும். மந்தையிலிருந்து வழிதப்பித் திரிகிறவர்களைக் கொண்டுவாரும். உள்ளேயிருக்கிற மற்றவர்களையும், தொடர்ந்து செல்லத்தக்கதாக அவர்களைத் தைரியப்படுத்தும். வியாதிப்பட்ட ஒவ்வொருவரையும் சுகமாக்கும். ஓ, தேவனே! இன்றிரவு உம்முடைய பிரசன்னத்தின் மூலமாக சுகமாக்கப்பட்டிராத ஒருவரும் எங்கள் நடுவில் இல்லாதிருப்பார்களாக. நாங்கள் எதனிடம் பேசுகிறோம் என்பதும், அது எங்களிடம் திரும்ப பேசுவதை நாங்கள் கேட்பதும் ஒரு கட்டுக்கதையல்ல, ஆனால் அது அவருடைய ஜனங்களின் மத்தியில் வாசம் செய்கின்ற நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையாயிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோமாக. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, கர்த்தாவே, உம்முடைய சத்தத்திற்கு செவிசாய்க்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 13இப்பொழுது, நீங்கள் விரும்பினால், என்னோடு கூட வேதாகமத்தை லேவியராகமம் 25 - வது அதிகாரத்திற்குத் திருப்ப விரும்புகிறேன். நான் பேச விரும்புகிற பொருளை எடுக்க 9 - வது வசனத்தையும் 10 - வது வசனத்தையும் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் திருப்புகிற வேளையில், இன்றிரவு இங்கே நான் பார்க்கிற சில நண்பர்களை அடையாளம் கண்டுக்கொள்ள விரும்புகிறேன்: பீனிக்ஸ்-லிருந்து (Phoenix) சகோதரன் மற்றும் சகோதரி வில்லியம்ஸ் (Brother Williams); விரைவில் பீனிக்ஸ்-ல் இருக்கிற மக்களுடன் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது; மேலும் இங்கே டூசானிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி நார்மன் (Brother and Sister Norman) அவர்களைக் காண்கிறேன்; சரியாக அவர்களுக்கு பின்பாக இங்கே ஜார்ஜியாவிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி ஈவான்ஸ் (Brother and Sister Evans) மற்றும் அநேகரையும் சுற்றிலும் காணத் தொடங்குகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. லேவியராகமம் 25 - வது அதிகாரம் 9 - வது மற்றும் 10 - வது வசனம்: “அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவ நிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும். ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.“ இதிலிருந்து நான் 'திரும்பிவருதலும் யூபிலியும்' என்ற பொருளை எடுக்க விரும்புகிறேன். நான் தவறாக புரிந்து கொள்ளவில்லையென்றால், இப்பொழுது நான் புரிந்துள்ளபடி மற்றும் சொல்லப்பட்டதைப் போல, இது லூசியானா மாகாணத்தில் (Louisiana) ஐம்பது வருடங்களுக்கு முன்பாக பரிசுத்த ஆவியானது புதிதாக (afresh) ஊற்றப்பட்ட நேரமாக இந்த நாள் இருக்கிறது. அவ்வாறே நான் விசுவாசிக்கிறேன். 14நான் பெந்தெகொஸ்தே அசைவுகளின் சில வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எப்படி அவர்கள், நூறு வருடங்களுக்கு முன்பதாக ரஷ்யாவில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, அதை அவர்கள் புறக்கணித்தவுடன், சரியாக எதைப் பெற்றுக்கொண்டனர் என்று நீங்கள் பாருங்கள்; எங்கெல்லாம் தேவன் அவருடைய ஆசீர்வாதங்களை அனுப்பி, ஜனங்கள் அதைப் புறக்கணிக்கிறார்களோ, அந்த இடம் எப்பொழுதும் பெருங்குழப்பத்திற்குள்ளாகவும், அதனுடைய நிலைமையில் அழுகிப்போன நிலைக்குள்ளாகவும் செல்லுகிறது. நாம் எல்லோரும் விசுவாசம் கொண்டிருக்கிற தேவனுடைய வல்லமையும் மற்றும் செய்தியுமானது, இந்த உலகத்திற்கும், அதனுடைய சிந்திக்கும் வழிமுறைக்கும், மற்றவர்கள் செய்தது போலவே நம்முடைய தேசமும் நடைமுறையில் (practical) செய்திருக்கும்வரை, மிகவும் விசித்திரமான ஒரு காரியமாகவே இருக்கும் என்பதில் நாம் நிச்சயமுள்ளவர்களாயிருக்கிறோம். அவ்வாறே நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது தேவனுக்கு கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் கொண்டுவரும்படியாக, அவர் நமக்கு கொடுத்திருக்கிறவைகளுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 15அவருடைய ஊழியக்காரன் என்று அழைக்கப்பட்ட இஸ்ரவேலுக்கு தேவன் ஒரு சுதந்தரவீதத்தைக் கொடுத்தார். ஒரு ஞாயிறுபள்ளிப் பாடத்தை போல நாம் அதைப் பொருத்த வேண்டும். நாளை இரவு நான் “எதற்காக மற்றும் எப்படி திரும்பிப்போகுதல்?” என்ற பொருளின் பேரில் பிரசங்கிக்க எண்ணங்கொண்டிருக்கிறேன். இன்றிரவு நான், ஜனங்கள் கிட்டத்தட்ட அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள், அதைத் தவற விடுவார்கள், அதைப் பெறுவதில் தோற்றுப்போவார்கள் என்று நினைத்தவனாய் என்னுடைய நேர்மையான மற்றும் உத்தமமான விசுவாசத்தின்படி அது என்னவாக இருக்கிறது என்றும், என்ன நடந்திருக்கிறது என்றும், ஏன் அவ்வாறு என்பதைப் பற்றியும் ஒரு பாடத்தைப் போல கற்பிக்க வேண்டியவனாயிருக்கிறேன். பிறகு நாளை இரவு “எப்படி நாம் திரும்பி வருகிறோம்?” என்ற பொருளின் பேரில் பேசப்போகிறோம். 16அல்லது இப்பொழுது, ஒரு ஒப்பிடுதலுக்காக காட்சிப்படுத்துவதற்காக நாம் இஸ்ரவேலை எடுத்துக்கொள்வோம், ஏனெனில் இது யூபிலியின் நேரமாயிருக்கிறது. மேலும் சபைக்கு ஒரு பங்கு அளிக்கப்பட்டது. கிறிஸ்துவாகிய அந்த பங்கானது பரிசுத்த ஆவியின் மூலமாக அதைப் பெற்றுக்கொள்பவர்களின் இருதயத்திற்குள் ஊற்றப்பட்ட போது, அவர்கள் தேவகுமாரர்களாக மாறினர். இப்பொழுது இஸ்ரவேல் தேவனுடைய ஒரு ஊழியக்காரனாயிருந்தான். அவனுக்கு... அவர்களுக்கு ஒரு சுதந்தரவீதம் கொடுக்கப்பட்டது. அந்த சுதந்தரவீதமானது வேறு யாருக்கும் கொடுக்கப்படக் கூடாததும், இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்படக் கூடியதாகவும் இருந்தது. பாலஸ்தீனா அவர்களுக்கு சொந்தமாயிற்று. நமக்கு நேரமிருந்தால் அல்லது நேரம் நம்மை அனுமதிக்குமானால், நாம் திரும்பிச் சென்று அந்த கோத்திரப் பிதாக்களின் பிறப்பைப் பற்றி பார்ப்போம் (அவர்கள் அந்த ஸ்திரீகளின் மூலமாக பிறந்தபோது, பிறந்த நிலையில் இருந்த ஒவ்வொரு குழந்தையும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு பாலஸ்தீனா தேசத்தில் அவனவனுடைய ஸ்தானத்தின் நிலைப்பாட்டில் (positionally) வைத்தவர்களாய், அந்த தாய் பிரசவ வேதனையில் உள்ள போதே இந்த கோத்திர பிதாக்களுடைய குரலை ஒலிக்கச் செய்தாள்) எவ்வளவாக இந்த எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் பேரில் நம்முடைய நம்பிக்கையை வைக்கலாம், ஏனென்றால் அவைகள் மிகவும் ஊக்குவிக்கப்பட்டதாய், அதனுடைய ஒவ்வொரு பகுதியும் சரியாக பொருந்தி, தேவன் என்னவாக இருந்தார், தேவன் என்னவாக இருக்கிறார், மற்றும் எப்போதும் என்னவாக இருப்பார் என்பதைப் பற்றி நமக்கு அது காட்சிப்படுத்துகிறது. 17இப்பொழுது, யோசுவா ஜனங்களுக்கு சுதந்தரவீதத்தை பங்கிட்டபோது, எப்படியாக அவரவர்களுடைய இடத்தில், சரியாக அந்த எபிரெயத் தாய்மார்கள் அந்த குழந்தைகளுக்கு பெயரிட்டதின்படி, அதே வழியில், அதே நிலையில் பொருத்தப்பட்டார்கள் என்று நாம் காண்கிறோம். பாலஸ்தீனாவில் அவரவர்களுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட்டனர்; ஆசேர், காத், நப்தலி, யூதா மற்றும் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய ஸ்தானத்தில் பொருந்தினர். என்னே ஒரு — ஒரு அழகான காட்சியை அது நமக்குத் தருகிறது! ஏனென்றால் அது ஒரு ஒப்பீடாக அதாவது தேவன் தம்மையும், ஒவ்வொரு சபை அங்கத்தினரையும், ஒவ்வொரு கற்களையும், ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு கிறிஸ்தவனையும், சபைக்குள்ளே பொருத்துவதாக இருக்கிறது. சாலொமோனுடைய ஆலயத்திற்காக முழு உலகத்திலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு, யோப்பா பட்டணம் மட்டும் கடல் மார்க்கமாகவும், பின்னர் அங்கிருந்து எருது வண்டிகள் மூலமாகவும் கொண்டுவரப்பட்ட வேறுபட்ட கற்களாகிய அவைகளனைத்தும், ஆலயமாக ஒன்றிணைக்கப்பட்டபோது அவைகளுடைய ஸ்தானத்தை சரியாக பெற்றிருந்ததைப் போல, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய விநோதமான வழியில் தேவனுடைய வீட்டில் ஒரு இடத்தை பெற்றிருக்கிறோம். 18தேவன், இந்த காலங்களினூடாக, நாம் புரிந்துகொள்ளாமலிருக்கிற, மிகவும் விநோதமான கற்கள் சிலவற்றை வெட்டி எடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவைகள் தேவனுடைய மாளிகையாகிய ஆலயத்தில் சரியாக தங்களுடைய இடத்தை பெற்றிருக்கின்றன. யோசுவா, கணித சாஸ்திரம் மூலமாக அல்ல, ஆனால் ஊக்குவித்தலின் மூலம், அவன் — அவன் தேவனால் ஊக்குவிக்கப்பட்டவனாய், அந்த கோத்திரப் பிதாக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய இடத்தை சீட்டினால் பங்கிட்டான், ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய பெயருக்கேற்ற வகையிலேயே பங்கிட்டான். தேவனுடையதை, அவருடைய சிறந்த வேலைப்பாட்டில், என்னே ஒரு — ஒரு காட்சியாக நமக்கு முன்பாக அது வைக்கிறது. தேவனைத் தவிர யாரும் எப்பொழுதும் அதை செய்திருக்க முடியாது, அங்கே அதைச் செய்ய எந்த வழியும் இல்லை , தேவன் மட்டுமே. அது என்றென்... என்றென்றும் அவர்களுடையதாகவேயிருந்தது, அது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வெகுமதியாக இருந்தது. தேவன் அவருடைய அற்புதமான கிருபையின் மூலம், ஜனங்களுடைய பிறப்பின்படியும், அவருடைய வார்த்தையின்படியும் அதில் அவர்களை வைத்து, அந்த நிலையில் அந்த தேசத்தை ஜனங்களுக்குக் கொடுத்தார். பரிபூரணமாக, எவ்வளவாக சரியாக அது பொருந்தினது (clucked)! இது ஒரு முன்னடையாளமாக உள்ளது (type) என்று நான் நினைக்கிறேன். 19இப்பொழுது, வேறொருவரும் எடுக்கக்கூடாத இடமும், மேலும் அந்த இடம் இஸ்ரவேலுக்காக மாத்திரம் என்பதாகவும் இருந்தது; அதைப் பற்றிக்கொண்டு (still it), அந்த இடத்திலுள்ள ஆசீர்வாதங்களை, எடுக்கக்கூடிய ஒவ்வொருவரும், அவர்களாக மாத்திரமே இருக்க வேண்டியதாயிருந்தது. இந்நிலையில், ஏதோவொரு காரணத்தினால், அல்லது எவ்வாறேனும் அவர்கள் தங்களுடைய காணியாட்சியை இழந்திருந்தால், அது வறுமையின் காரணமாக இருக்கலாம் அல்லது வேறு சில வழிகளில் அவர்கள் தங்கள் பிதாக்களுடைய காணியாட்சியை இழந்திருக்கலாம். ஒருவர் அதை தன் குமாரனுக்கு கொடுப்பார். அவர் அதை அவருடைய குமாரனுக்கு கொடுப்பார்,அது அந்த கோத்திரத்திற்கே சொந்தமானது. அது ஒரு காணியாட்சியாய் இருந்தது, அந்த மக்களுக்கே என்றென்றும் சொந்தமானதாய் இருந்தது. நான் வேதவசனங்களைத் தவறாக புரிந்துகொள்ளவில்லையென்றால், வர இருக்கின்றதான மகத்தான ஆயிரவருட அரசாட்சியில், நான் என்ன பொருள்படுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் (you know what I mean), அவர்கள் திரும்பவும் அந்த இடத்தை எடுத்துகொள்வார்கள் என்று விசுவாசிக்கிறேன், ஏனென்றால் மகத்தான நகரமாகிய சீயோன் பிரகாசிக்கப்படும் என்று நாம் அறிந்திருக்கிறோம். வெளிச்சம் சீயோனின் மேல் தங்கியிருக்கும். எனவே இரவும் பகலும் அங்கே அவர்களுக்கு இருக்காது. ஆயிரவருட அரசாட்சியில் அந்த கோத்திரங்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களை, மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று நான் விசுவாசிக்கிறேன். 20ஏதாவதொரு விதத்தில் ஒரு நபர், தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவர்களுடைய காணியாட்சியை இழந்துபோவாரேயானால், அங்கே யூபிலி ஆண்டு என்று அழைக்கப்பட்ட ஒரு வருடம் வருகிறது. ஒவ்வொரு ஏழு வருடத்திற்கும் ஒரு — ஒரு ஓய்வை, ஒரு ஓய்வுவருடத்தை உடையவர்களாயிருந்தனர். ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு ஓய்வுநாளை உடையவர்களாயிருந்தனர். ஒவ்வொரு ஏழு வருடத்திற்கும் ஒரு ஓய்வு வருடத்தை உடையவர்களாயிருந்தனர். ஏழு ஓய்வு வருடங்கள், அதாவது நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்பு, ஐம்பதாவது வருடம் யூபிலியாயிருந்தது. ஏதோ சில காரணங்களால், தன்னுடைய காணியாட்சியை இழந்திருந்த ஒவ்வொரு மனிதனும், அவன் ஒரு உண்மையான இஸ்ரவேலனுடைய இரத்தத்தைக் கொண்டவனும், மரபுரிமையில் பிறந்தவனுமாயிருக்கும் பட்சத்தில், யார் அந்த உடைமையை வைத்திருந்தாலும், யூபிலி வருடத்தில் அது இலவசமாக திரும்பவும் அவனிடத்திற்கே சேரவேண்டியதாயிருந்தது. அவன், எதையும் செலுத்த வேண்டியதாயில்லை. அவன், ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியதாயில்லை, ஆனால் அவன் என்ன செய்து கொண்டிருந்தானோ, அதை அப்படியே நிறுத்திவிட்டு அவனுடைய காணியாட்சிக்குப் போகவேண்டியவனாயிருந்தான். ஓ, என்னே! அவன் அதற்கான உரிமையைப் பெற்றிருந்தான், அது தேவனால் கொடுக்கப்பட்ட உரிமையாயிருந்தது, ஏனென்றால், அவன் கிருபையினாலே அதைச் சுதந்தரித்திருந்தான். அது அவனுடைய பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது, பின்னர் வழிவழியாக (year after year) அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. என்ன நடந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் அதை இழந்திருந்தால், அது விடுதலையாகிப் போகத்தான் வேண்டும். அதின் அர்த்தமாவது, ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும், அவர்களுடைய உரிமைமிக்க காணியாட்சிக்குத் திரும்புவதற்காக அளிக்கப்பட்ட பாதை கிருபையாயிருக்கிறது. இந்தக் கடைசி நாட்களில், சபையைப் பற்றியதான என்னே ஒரு காட்சியை இன்றிரவு அது நமக்கு அளிக்கிறது! மனிதன் என்ன செய்ய முடியும் என்பதை காண்கிறீர்கள், பிறகு தேவன் என்ன செய்கிறார் என்பதையும் காண்கிறீர்கள். மனிதன் செய்கிறது எதுவோ, அது தோல்வியடைந்து கொண்டிருக்கிறது, அது தோல்வியடையும், அது தோல்வியடைந்திருக்கிறது, மேலும் அது எப்பொழுதும் தோல்வியையே தழுவும். ஆனால் தேவன் செய்வது எதுவோ, அது நித்தியமானது, என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியது, ஒன்றும் அதை வெளியே எடுத்துப் போடவும் முடியாது. தேவன் அதை அருளினார், அது அவருடைய இலவச வெகுமதியாய் இருக்கிறது, அவருடைய ராஜாதிபத்திய முன்னோக்கு பார்வையின் மூலம் (sovereign foresight) அதைக் கண்டவராய், அதை வைத்தார். அதை எதுவும் ஒருபோதும் அசைக்கமுடியாது, அது அங்கே நித்தியமாக இருக்கும். மீட்கும்படிக்கு அல்லது அவர்களுடைய உரிமைமிக்க ஸ்தானத்திற்கு அவர்களை திரும்பக் கொண்டுவரும்படிக்கு, தேவன் அவருடைய ஜனங்களுக்கு கிருபையை வெளிப்படுத்துகிற விதமே யூபிலியாய் இருந்தது. 21இப்பொழுது, இது மீண்டுமொரு யூபிலியின் நேரமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இது யூபிலியின் நேரமாயிருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்பாக என்று நம்புகிறேன், பெந்தெகொஸ்தே ஜனங்கள் வல்லமை மிக்கவர்களாகவும், பெலமுள்ளவர்களாகவும் இருந்த இந்த மகத்தான மாகாணமாகிய லூசியானாவில், தேவன் ஒரு சபையை செயல்பாட்டில் (in operation) வைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இதை குறைகூறுதலாக சொல்லவில்லை, நான் இதை உத்தமமாகச் சொல்கிறேன். அந்தச் சிறிய சிறுபான்மையானது மகத்தானதாய் வளர்ந்திருந்தாலும், அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும், காவல்துறையிலும், ஆட்சியாளர்களிலும், இன்னுமாக ஒன்றிய அரசிலும் கூட மகத்தான மனிதர்களாக பெந்தெகொஸ்தே அங்கத்தினர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களாக வளர்ந்திருந்தாலும்... டுவைட் ஐசன்ஹோவருடைய ஆட்சியில் (Dwight Eisenhower) ஏறக்குறைய நாற்பது சதவிகித அரசாங்க ஊழியர்கள் பெந்தெகொஸ்தேயினர்களாயிருந்தனர் அல்லது பெந்தெகொஸ்தே பின்னணியைக் கொண்டவர்களாயிருந்தனர் என்று சில காலத்திற்கு முன்பு புரிந்து கொண்டேன். 22ஐம்பது வருடங்களுக்குள்ளாக, அசூசா வீதியின் சொற்ப அளவுள்ள ஜனம் என்ற நிலையிலிருந்து, உலகத்தில் அணிவகுத்து செல்லுகின்ற வல்லமையான சபைகளில் ஒன்று என்ற அளவிற்கு இன்றைக்கு வளர்ந்திருப்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், நான் அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவன் அவருடைய அற்புதக் கிருபையின் மூலம் ஒரு நாள், என்னை அவர்களுக்குள்ளே கொண்டுவந்து அவர்களில் ஒரு பாகமாக என்னை மாற்ற பொருத்தமாயிருப்பதைக் கண்டார், நான் அவர்களில் ஒருவனாக இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 23நான் கூறுகிற அடுத்த காரியம் எந்த வகையிலும் தீங்கான வழியில் இல்லை, ஆனால் சபையினுடைய வைராக்கியத்தினூடாக இருக்கிறது. அதென்னவெனில், சபையானது எண்ணிக்கையில் வளர்ந்திருக்கிறது, வல்லமையில் வளர்ந்திருக்கிறது, பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறது, ஆனால், ஆவிக்குரிய விதமாக அன்று இருந்த நிலையிருந்து அது விழுந்துபோய்விட்டது. அங்கே.... அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து, எண்ணிக்கையில் மகத்தானவர்களாக ஆகியிருந்தாலும் அல்லது சிறுபான்மையினராகவே இருந்திருந்தாலும், அவர்களுக்கு நடந்திருக்க வேண்டிய அந்த மகத்தான காரியமானது, அவர்களால் பற்றிப்பிடிக்க முடிந்த அந்த மகத்தான காரியமானது, அவருடைய அற்புத கிருபையின் மூலம், அவர்களுக்கு வழிகாட்டவும், அவர்களை நடத்தவும், தேவன் அவர்கள் மேல் ஊற்றியிருந்த அந்த பரிசுத்த ஆவியே. இன்றைக்கு நாம் பயணிக்கிற சுலபமான வழியினூடாக அல்லாமல், ஒவ்வொருவராலும் புறக்கணிக்கப்பட்டு, இருதயவலி எனும் பாதையினூடாக, வருத்தமெனும் பாதையினூடாக, உபத்திரவம் எனும் பாதையினூடாக, தெருமுனைகளுக்கும், பாதையின் குறுக்குகளுக்கும், பெருவழிகளுக்கும் சென்றதான சுடரிடும் ஆத்துமாக்களைப் பற்றிப் பிடித்த, அவர்கள் மேல் விழுந்த அந்த எரிகிற அக்கினியை, அவர்கள் பெற்றிருந்ததான அந்த வைராக்கியத்தின் ஒரு — ஒரு மகத்தான தொடர்பை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். 24ஒருவேளை என்னுடைய அருமையான சகோதரன் உலகத்தின் அப்பால் இருந்து கேட்டு கொண்டிருந்தால்., அதை எவ்வளவாக இன்றிரவு நான் விரும்புகிறேன். ஒரு பழைய பரிசுத்தவான் சில வருடங்களுக்கு முன்பாக இங்கே ஷ்ரீவ்போர்டில் (Shreveport) வாழ்ந்தார். அவர் வெளியே அமர்ந்திருப்பார். நான் முதன்முறையாக இங்கே வந்த பொழுது, அவர், “சகோ. பிரன்ஹாமே நீர் சொல்வது சரிதான், சபையானது தன்னுடைய பிடியை இழந்து கொண்டிருக்கிறது. ஓ! அதை மீண்டும் பெற தேவன் உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று கூறுவார். சகோதரர் லைலும் (Brother Lyle) நானும் அங்கே அமர்ந்திருந்தோம், அவர் சகோதரி மூர் (Sister Moore) அவர்களின் தகப்பனார்., அவர் என்னிடம் எப்படியாக முந்தைய நாட்களில், அவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்களாய், அவர்கள் உபத்திரவப்பட்டிருந்த ஆரம்ப நாட்களைப் பற்றி என்னிடம் கூறினார். ஒருமுறை அவர் ஒரு கூட்டத்தில் இருந்தபோது, அவர்களுக்கு... அவர்கள் ஆவியில் கர்த்தரை ஆராதிக்கத் தடை செய்யப்பட்டிருந்தனர். ஒரு கூட்ட மக்கள் சிறிய ரக மற்றும் பெரிய ரக துப்பாக்கிகளுடன் வந்து ஜன்னல் வழியாக சுட்டனர். வயதான ஒரு சகோதரி தன் கைகளை மேலே உயர்த்தியவாறு, தரையிலே நின்றுக் கொண்டு தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார். துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாக்களால் ஜன்னல்கள் துளைக்கப்பட்ட பொழுது, அந்த தோட்டாக்கள் அந்தப் பெண்ணின் ஆடையைத் தாக்கி, அவளுக்கு எந்த சேதத்தையும் உண்டாக்காமல் தரையிலே விழுந்தது. 25இன்றைக்கு அதேக் காரியத்தைச் செய்யக்கூடிய ஏதோ ஒன்றிற்கு நாம் திரும்புவது அவசியமாயிருக்கிறது, மேலும் நாம் தேவனுடைய வல்லமைக்கு திரும்புவது அவசியம். உபத்திரவம் எப்பொழுதும் சபைக்கு பலத்தைக் கொடுக்கிறது; நம்முடைய எண்ணிக்கையிலும் கூட... சகலமும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறபடியால், நாம் செல்லக்கூடாத இடங்களுக்கு செல்கிறோம், நாம் சோம்பேறித்தனம் அடைகிறோம். நாம் அதை மிகவும் சுலபமாக பெற்றிருந்தவர்களாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியின் வல்லமையை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு அது வாக்குத்தத்தத்தையும், விசுவாசத்தையும், ஜெபத்தையும், வியர்வையையும், கண்ணீரையும், வருத்தத்தையும் எடுத்துக் கொள்ளுகிறது. அந்த நாட்களில் அவர்கள் பெற்றிருந்த வைராக்கியமும் வல்லமையும் நம்முடைய ஐக்கியங்களிலிருந்து நீண்டகாலமாகவே மறைந்துவிட்டது. இன்று இரவு இந்த ஜன்னல்கள் சுடப்பட்டால், மக்கள் எல்லா வழிகளிலும் சிதறி ஓடி, மீண்டும் அவர்கள் திரும்ப வரவே மாட்டார்கள் என்று அச்சப்படுகிறேன். 26ஆனால்... மற்றுமொரு காரியம், உங்களுக்குத் தெரியுமா, அந்த நாட்களில் அதுபோன்ற சம்பவம் நடந்ததை நினைத்துப் பார்ப்பது மிகவும் மோசமானதாயிருக்கிறது, இருப்பினும், அந்தப் பண்டைய நாட்களில் இருந்த தேவன், இன்றைக்கும் அதே தேவனாக இருக்கிறார், தேவனாக இருந்தவர், எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார் என்பதையே அது நிரூபிக்கிறது. அவருடைய மக்கள் தங்களுடைய வாக்குறுதிகளையும், தங்களுடைய உறுதிமொழிகளையும் காக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், எல்லாவற்றையும் சுலபமாக நாம் அடையும் பொழுது, நாம் அதிலிருந்து வழுவிச் செல்கிறோம், நீங்கள் அறியவேண்டிய முதல் காரியம், நம்முடைய சுதந்தரவீதத்தை இழந்தவர்களாய் இந்தக் காரியங்களில் இருந்து நாம் வெளியே சென்று விட்டோம். இப்பொழுது லேவியராகமம், இதில் 20-ம் அதிகாரம், அல்லது 25-ம் அதிகாரம் 25-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். நான் ஒப்பிட விரும்புகிற ஏதோ ஒன்று அதிலிருந்தது, குறை கூறுவதாக அல்ல, ஆனால் நடுநிலையோடு உத்தமமாக தேவபயத்தோடு, அந்த தேவனுடைய பிரசன்னத்தில் தான் இன்றிரவு நாம் எல்லாரும் இருக்கிறோம். நீங்கள் கவனித்தீர்களா? கவனிக்கவில்லையென்றால், நீங்கள் வீட்டுக்குச் செல்லும்போது அதை வாசியுங்கள். ஒரு மனிதன் மதில் சூழந்த பட்டணத்திற்குள்ளே ஒரு வாசஸ்தலத்தை வாங்கியிருக்கும் பட்சத்தில், அவன் அதை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்திற்குள் அந்த வாசஸ்தலத்தை மீட்டுக்கொள்ளலாம். அவன் அதை மீட்கவில்லையென்றால், அந்த ஆஸ்தியானது மதில் சூழப்பட்டிருக்கும் பட்சத்தில், யூபிலியின் போது அது விடுதலையடையக் கூடாமல் அந்த நிலையிலேயே தொடர்ந்து இருந்திருக்க வேண்டுமல்லவா? அது அங்கேயே தரித்திருக்கும்படி கட்டுவிக்கப்பட்டிருந்தது. அவைகள் மதிலால் சூழப்பட்டிருந்தது. யூபிலியை, எக்காளம் தொனிப்பதை, அவைகள் கேட்டதேயில்லை. அவர்கள் எக்காளத்தை ஊதினர், எனினும் அது விடுதலையாகிப் போக முடியவில்லை . 27ஆரம்பத்தில் நாம் பெற்றிருந்த காரியங்களில் ஒன்று, எப்படியாக அந்தப் பண்டைய காலத்தவர் நம்மை ஒன்றாக ஸ்தாபித்துக் கொண்டதற்கு எதிராக பிரசங்கித்து, நம்முடைய பிதாக்கள் எதிலிருந்து வெளியேற கடினமாக சண்டையிட்டார்களோ, நாம் சரியாக அதேக் காரியத்தை செய்து அதற்கே திரும்பிவிட்டோம் என்று நான் மிகவும் பயப்படுகிறேன். மதில் சூழ்ந்த பட்டணம், இன்றைக்கு நம்மில் அநேகர், நம்முடைய பெரும்பாலான பெந்தெகொஸ்தே மக்கள் எங்கேயோ ஏதோ சில அமைப்புகள் மற்றும் ஏதோ சில ஸ்தாபனங்கள் என்ற சுவற்றுக்குள்ளாகிவிட்டனரே! மேலும் அவர்கள் யூபிலியினுடைய சத்தத்தை என்றும் கேட்க முடியாது மற்றும் சுதந்தரவீதத்திற்கு என்றும் திரும்பமுடியாது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், மதில் சூழ்ந்திருக்கிற ஒவ்வொன்றும் விடுதலையாகிப் போகவே முடியாது. அவர்களுடைய மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே இருந்தார்கள். மதிலுள்ள பட்டணத்திற்குள்ளாக அவர்களுடைய சுதந்தரவீதத்தை வைத்திருந்தால், அவைகள் அதன் உரிமையாளருக்கே சொந்தமானது. ஆனால் அவைகள் வெளியே இருந்திருந்தால், மதில் சூழப்படாத சிறு நகரங்களாக இருந்திருந்தால், அவைகள் சமபூமியைப் போல கருதப்பட்டு யூபிலியில் விடுதலையாகியிருக்க முடியும். 2864-07-19எக்காளப் பண்டிகை 29நான் குறை கூற விரும்பவில்லை . ஆனால், ஆவிக்குரிய உண்மையை அப்படியே எடுத்துக் கூறவே விரும்புகிறேன். இப்பொழுது நம்மில் அநேகர், நம்முடைய பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தில், இந்த கடைசி நாட்களில், நாம் உள்ளே வந்து நம்மையே ஸ்தாபனமாக்கிக் கொண்டு, ஒரு கூட்ட மக்களின் அறிவினால், பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்தும் தன்மையைப் புறக்கணித்துவிட்டோம் என்பதாக நாம் காண்கிறோம். நாம் ஒருவரிலொருவர் ஐக்கியம் கொள்வதற்குப் பதிலாக அது நம்மை பிரித்துவிட்டது, பல வேறுபட்ட ஸ்தாபனங்கள் கொண்ட மக்களாக அது நம்மை பிரித்துவிட்டது, மேலும் அவ்விதமான செயலினால் அது நம்முடைய சுதந்தரவீதத்தை உடைத்திருக்கிறது. இப்பொழுது, இந்த மதில்களுக்கு உட்புறம், பரிசுத்த ஆவியின் வல்லமைக்குப் பதிலாக, ஒரு சபையினுடைய பாரம்பரியங்கள் மற்றும் அதைப் போன்றவைகளை எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியையும், வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்ற ஒரு இடத்திற்குள்ளாக நாம் மதிலிடப்பட்டிருந்தால் அந்த நபருக்கு யூபிலி என்பது எந்த அர்த்தத்தையும் கொடுக்காது, நிச்சயமாக. உன்னுடைய சுதந்தரவீதத்தை தாயார் விட்டு... தகப்பனார் அதைச் செய்தார் (கொடுத்தார் - மொழிபெயர்ப்பாளர்) என்று எவ்வளவுதான் நீ கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் நீயோ, மதில் சூழப்பட்ட நிலையில் அதை விற்றுப் போட்டு, ஒரு பாரம்பரியத்திற்குள்ளாக வந்து, கிறிஸ்துவுக்குள்ளாக சுதந்திரமாக இருந்து பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, உன்னுடைய ஐக்கியத்திற்குள் நுழைக்கப்பட்ட இந்த கோட்பாட்டையே ஏற்றுக்கொண்டாய். 30அக்காலத்தில் முந்தைய சபையானது ஒன்றாகக் கூடி வந்தபொழுது, உடனடியாக அவர்கள் ஸ்தாபிக்கச் செல்ல வேண்டியதாயிருந்தது. யாராவது ஒருவர் ஒரு சிறு குழுவை ஏற்படுத்தி அதற்கு தலைவனாக ஆவார் என்று பயந்த காரணத்தினால் அவர்கள் அதைச் செய்த பொழுது, உள்ளே ஏற்பட்ட பிரச்சினைகளை அவர்கள் பெற்றவர்களாகிவிட்டனர், பின்னர் அவர்கள் அந்த பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த வேண்டியதாயிருந்தது. அவர்கள் மாத்திரம் அதை அப்படியே விட்டிருந்தால் (ஸ்தாபிக்காமல் - மொழிபெயர்ப்பாளர்), பரிசுத்த ஆவி களையெடுக்கவும், வெளியே கொண்டு வரவும், வழிநடத்தவும், உள்ளே வைக்கவும் அனுமதித்திருந்திருப்பார்களானால், சபையானது இப்போதிருக்கிற ஆவிக்குரிய வல்லமையைக் காட்டிலும் இன்னும் வெகுதூரம் முன்னேறியிருக்கும். ஆம். 31இப்பொழுது ஒரு மனிதனோ அவனுடைய குடும்பமோ, யூபிலியினுடைய எக்காளச் சத்தத்தை, அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்தவர்களாய் அந்தச் சத்தத்தைக் கேட்க முடிந்தால், அவர்களுடைய மூல காணியாட்சிக்கு அவர்களால் திரும்பிப் போக முடியும். இப்பொழுது அவர்கள் ஒரு ஆசாரியனுடைய எக்காளச் சத்தத்தைக் கேட்டால், (ஊழியக்காரனுடைய எக்காளச் சத்தத்தை, எக்காளம் என்பது சுவிசேஷமாயிருக்கிறது). அதை அவர்கள் கேட்கும் போது, அதன் அர்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கிறபடியால், அது (இழந்துபோனது - மொழிபெயர்ப்பாளர்) அவர்களுடைய சுதந்தரவீதம் என்று அறிந்திருக்கிறபடியால், அவர்கள் எங்கே அதை இழந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, எவ்வளவு தூரம் அதிலிருந்து விலகியிருந்தாலும், அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியதாயிருந்தாலும், அவர்கள் திரும்பி வந்து அவர்களுடைய சுதந்தரவீதத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியத்தை உடையவர்களாயிருந்தார்கள். அந்த முழு குடும்பமும் வந்து அவர்களுடைய காணியாட்சியைப் பெற்றுக்கொள்ளமுடியும். 32அதேபோல, பல ஆண்டுகளுக்கு முன்பதான நம்முடைய பெந்தெகொஸ்தே அனுபவத்தை நமது சகோதரர்கள் மற்றும் பிற ஏனையோரிடமிருந்தும் கேள்விப்பட்டு, நாம் அறிந்திருக்கிற காரியங்களை அறிந்தவர்களாய், இங்கே லூசியானாவில் இருக்கிற ஆண்களும் பெண்களும் இன்றிரவு தங்கள் சுதந்தரவீதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் (so is it tonight). நாம் மதிலால் சூழப்பட்டிருக்கிறோம் என்பதைக் காண்கிறோம், அல்லது மதில் சூழப்படாதவர்களாக, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்குப் பதிலாக யாரோ ஒருவர் ஏதோ சொல்லுவதைக் கேட்கும் அளவிற்கு நாம் அதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தாலும், அதைக்குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்பதை உங்களால் கேட்க முடிந்தால், இப்பொழுதே யூபிலியின் நேரமாய் இருக்கிறது, உங்கள் மூல சுதந்தரவீதத்திற்கு, அசலான பரிசுத்த ஆவிக்கு மீண்டும் திரும்புங்கள். ஞாபகங்கொள்ளுங்கள், அவனால் விடுதலையாகிப் போக முடிந்தது. எதையும் அவன் செலுத்தவேண்டியதாயில்லை, எதையும் செய்யவேண்டியதாயில்லை, வெறுமனே எழுந்து திரும்பிப் போக வேண்டும், அது மாத்திரமே அவன் செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் மாத்திரம் எக்காளச் சத்தத்தை அறிந்திருப்பானானால்., ஆனால் அவனோ எக்காளச் சத்தத்தை அறிந்திருக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய குமாரர்களாயிருந்தார்கள். 33நாம்... குமாரன், வீட்டிலே என்றைக்கும் நிலைத்திருக்கிறார் என்று பரிசுத்த யோவான் 8:35-ல் இயேசு கூறினார். இப்பொழுது ஒரு வேலைக்காரன் நிலைத்திருக்கிறதில்லை. ஒரு வேலைக்காரன் நிலைத்திருக்கிறதில்லை. ஞாபகங்கொள்ளுங்கள், அவன் ஒரு குமாரனாயிருக்கிறான், வேலைக்காரனல்ல; அவன் ஒரு குமாரனென்றால் அவன் ஒரு குமாரனாகவே பிறந்திருக்கிறான். அவன் ஒரு வேலைக்காரனாய் இருந்தால் அவன் சேர்க்கப்பட்டவனாயிருக்கிறான் அல்லது விலைக்கு வாங்கப்பட்டவனாயிருக்கிறான். ஓ! சபையை சேர்ந்து கொள்வது என்கிறதான எந்த ஒரு காரியமும் அங்கே இல்லை. வேதத்தில் அதற்கான ஒரு வார்த்தையும் கூட இல்லை. நீங்கள் சபையில் சேர்ந்து கொள்ளமுடியாது. சபை என்பது, நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக அதற்குள் பிறக்கத்தக்கதாக, அது காணக்கூடாத இயேசுகிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. சபையை சேர்ந்து கொள்வது என்கிறதான எந்த ஒரு காரியமும் அங்கே இல்லை . 34வாடிகனின் மூல கையெழுத்து பிரதியாகிய எம்பட்டிக் டயக்கலாட் (Emphatic Diaglott) என்ற இருமொழி வேதாகமத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் நீங்கள் வாசிப்பீர்களென்றால்... அதே வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தை நீங்கள் கிங் ஜேம்ஸ் பதிப்பில் (King James version) பார்க்கும்போது, அது, “தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான ஸ்திரீ” என்று கூறுகிறது. வேசி சபை, ஒரு குமாரத்தி, அவள் குமாரத்திகளை உடையவளாக இருந்தாள், அநேக குமாரத்திகள் அவளுடன் பங்குபெற்றிருந்தார்கள். அவள் அந்த வேசியாயிருந்தாள். முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கம், அது நிசாயாவில், ரோம், நிசாயாவில் ஸ்தாபிக்கப்பட்டது. நிசாயா ஆலோசனை சங்கத்திற்குப் பிறகு, அவள் ஒரு ஸ்தாபனமாக உலகளாவிய கிறிஸ்தவ சபையின் அமைப்பாக மாறினாள், அவள் குமாரத்திகளையுடையவளாக இருந்தாள். “அவள் தூஷணத்தின் நாமங்களைப் பெற்றிருந்தாள் (she had names of blasphemy)” என்பதாக கிங் ஜேம்ஸ் தனது பதிப்பில் போட்டுள்ளதை நீங்கள் அதில் காண்கிறீர்கள். ஆனால் மூல டயாக்லாட்டில் (Diaglott), “அவள் தூஷணமான நாமங்களால் நிறைந்திருந்தாள் (she was full of blasphemous names)” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தூஷணத்தின் நாமங்கள் என்பதற்கும் தூஷணமான நாமங்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு அது வித்தியாசமாகவே பொருள்படுகிறது. எனக்குத் தெரியவில்லை , நான்... நான் தவறாயிருந்தால், தேவனே என்னை மன்னியும். கிறிஸ்தவத்தின் பெயர்களை சபைகள் எடுத்துக்கொண்டு, உலகத்தைப் போல ஜீவித்து, உலகத்தைப் போல் நடந்து, உலகத்தின் காரியங்களைச் செய்து, ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபைக்கு அவமானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவர்கள் சபையில் சேர்ந்து கொள்கின்றனர். நீங்கள் மெத்தடிஸ்ட்டு விடுதி, பிரஸ்பிடேரியன் விடுதி, அல்லது பெந்தெகொஸ்தே விடுதியை சேர்ந்து கொள்ளலாம், ஆனால் உங்களால் சபையில் சேர்ந்து கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக நீங்கள் சபைக்குள் கட்டாயம் பிறந்திருக்க வேண்டும். அது உண்மையாயிருக்கிறது. 35இப்பொழுது நாம் எங்கே செல்கிறோம் என்று பார்க்கிறோம், சரி. ஞாபகங்கொள்ளுங்கள், குமாரர்கள் நிலைத்திருக்கிறார்கள், அவர்கள் என்றென்றைக்கும் அங்கே இருக்கிறார்கள். “நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி, உலகத்தோற்றத்திற்குமுன்னே முன்குறித்தார்” என்ற எபேசியர் 1:5ன் படி (தமிழ் வேதாகமத்தில் எபே 1:46 - மொழி.) முன்குறித்தலின் மூலமாக அவர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய சபைக்குள்ளாக பிறந்த குமாரர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் அதற்குள்ளாக பிறந்திருக்கிறபடியால் அங்கே எப்பொழுதும் நிலைத்திருக்கிறார்கள். அது சரியாயிருக்கிறது. ஒரு வேலைக்காரன், இப்பொழுது, ஞாபகங்கொள்ளுங்கள், ஒரு வேலைக்காரன் அவனுடைய வெகுமதியையோ அல்லது கூலியையோ பெறுகிறான்; ஆனால், ஒருபோதும் அவன் யூபிலியில் விடுதலையடைந்தவனாக காணப்படவில்லை. இல்லை ஐயா! இஸ்ரவேலனாய் பிறக்காத ஒரு வேலைக்காரன் யூபிலியில் விடுதலையடைந்ததில்லை. அவன் யூபிலியில் விடுதலையாக வேண்டுமென்றால் அவன் பிறந்தவனாய் இருக்க வேண்டியிருந்தது. அவன் தன்னுடைய கூலியைப் பெற்றுக்கொண்டான். அநேக மக்கள் தங்களுடைய வெகுமதியைப் பெறுகிறார்கள். அந்த மாய்மாலக்காரர்களைக் குறித்து இயேசு, “அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்தார்கள்; ஆனால், நீங்களோ வித்தியாசமானவர்கள்” என்றார். ஆம். அதைத்தான் இயேசு அந்த யூதர்களைக் குறித்து யோவான் 8-ம் அதிகாரத்தில் கூறிக்கொண்டிருந்தார். அவர்களோ, “நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம்” என்றார்கள். அவர், “அடிமையானவன் வீட்டிலே நிலைத்திரான்” என்றார். ஆனால் அவர் அவர்களுக்குப் பிறப்பைக் கொடுத்த போது, அவர்கள் அடிமைகளாக இருக்கவில்லை, ராஜ்யத்தில் அவர்கள் அவருக்கு குமாரர்களாயும் உடன்-சுதந்திரவாளிகளாகவும் (jointheirs) இருந்தார்கள். அந்த வழியில்தான் சபையானது இருக்கிறது. அது ராஜ்யத்தில் கிறிஸ்துவுக்கு உடன்சுதந்திரவாளியாகவும், அவர் மூலமாக தேவனுக்கு அனைத்து காரியங்களிலேயும் சுதந்திரவாளியாகவும் இருக்கிறது. 36சபைகளின் முதல் ஸ்தாபன அமைப்புகளுக்கு முற்பிதாக்கள் சென்ற அதே திசைக்கு இப்பொழுது சபையானது விலகி சென்றுவிட்டது என்று நாம் காண்கிறோம். காலங்களினூடாக அதே வழியில் தான் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் ஒரு போதும், ஒரு போதும் வார்த்தையைக் கேட்கமாட்டார்கள், அவர்கள் வார்த்தையை விசுவாசிக்க மாட்டார்கள், அடிமையானவர்கள் ஒருபோதும் விடுதலையடைய மாட்டார்கள். ஆசாரியன் தேசத்தினூடாக சென்று, விடுதலையின் சத்தத்தை தேசம் முழுவதும் தொனிக்கச் செய்து, ஒவ்வொரு மனிதனும் விடுதலையடைந்து விட்டான் என்று முழங்கின, எக்காளச் சத்தத்தை அடிமையானவர்கள் கேட்டார்கள். ஒரு யூதனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவன் தன்னுடைய காணியாட்சிக்குத் திரும்பிப் போகக் கூடும் என்பதை அறிந்திருந்தான். என்ன நடந்திருந்தாலும், எவ்வளவு தூரம் அவன் விற்கப்பட்டு இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, அவனால் திரும்பிப் போக முடிந்தது, ஏனென்றால் அவன் வீட்டிலே பிறந்திருக்கிறான். அவன் தன் தகப்பனுடைய வீட்டிலே இருந்தான், பிறந்தவனாய் இருந்தான். ஆனால் அடிமையானவனோ தான் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை அறியாதவனாய் இருந்தான். ஓ! என்னே! 37அவர்கள் இருவருமே பாவத்தின் கீழாக விற்கப்பட்டு, ஒரே எஜமானுக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அநேக பெந்தெகொஸ்தேயினர் இன்றிரவு அதே வழியில் விற்கப்பட்டிருக்கின்றனர். ஓ! சகோதரனே, திரும்பு! உங்களுடைய மூல சுதந்தரவீதத்திற்கு திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் அனைவரும் திரும்புங்கள், திரும்பிச் செல்லுங்கள், இதுவே திரும்பிச்செல்லுகிற நேரமாயிருக்கிறது. இப்பொழுது ஒரு புறஜாதியான், புறஜாதி அடிமை அதை செய்திருக்க முடியாது. அவனுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. அதுவுமல்லாமல் புறஜாதி என்பதற்கு “ஒரு அவிசுவாசி” என்று பொருள். வார்த்தையில் ஒரு அவிசுவாசி. அவர்களில் அநேகர் அசலான வார்த்தைக்குச் செவி கொடுப்பதற்குப் பதிலாக சபைகளுடைய பாரம்பரியங்களையும் சடங்குகளையும் கோட்பாடுகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். அசலான வார்த்தையானது தன்னை தொனிக்கச் செய்கையில், நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை ஒரு பரிசுத்த-உருளை (holyroller) என்று அழைக்க முற்படுகின்றனர். ஐம்பது வருடங்களுக்கு முன்பு லூசியானாவில் அவர்கள் நமது முற்பிதாக்களை 'பைத்தியக்காரர்கள்' என்று அழைத்ததைப் போல நம்மையும் அழைக்க விரும்புகிறார்கள். “இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனை ஆராதிக்கிறேன்” என்பதாக முன்னே பவுலின் நாட்களில் இருந்தது போலவே இருக்கிறது. பாருங்கள் ஒரு புறஜாதிக்கு அதைக் குறித்து எதுவுமே தெரியாது. அவன் ஏதோவொன்றாக தன்னைக் அழைத்துக் கொண்டாலும், ஒரு புறஜாதி என்பவன் ஒரு அவிசுவாசியே, தேவனுடைய வார்த்தையில் ஒரு அவிசுவாசி, அதுவே அவனை புறஜாதியாக்குகிறது. 38அது தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே உரியது. “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” என்ற வகையில்தான் இன்றைக்கும் இருக்கிறது. அதைச் செய்கிறது தேவனே. தேவன் தம்முடைய கிருபையினாலே அதைச் செய்கிறார், இயேசு, “பிதா ஒருவனை இழத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்” என்றார். உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் சபையை தெரிந்துகொண்டது தேவனுடைய கிருபையாயிருக்கிறது. அந்த சபையானது தேவனுடைய வார்த்தையைக் கேட்கும், அவர்கள் ஒவ்வொரு பாரம்பரியத்தையும் தள்ளிவிட்டு, முரண்பாடாயிருக்கிற ஒவ்வொரு ஸ்தாபனங்களையும் அமைப்புகளையும் தள்ளிவிட்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே தேவனைச் சேவிப்பார்கள். ஆமென். நிச்சயமாகவே அவர்கள் எக்காளச் சத்தத்தை அறிந்திருக்கிறார்கள். “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்.'' “நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” “வார்த்தை.” “அது தேவனுடைய சத்தம் என்று நீங்கள் சொல்கிறீர்களா?” “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். என் ஆடுகள் அதை அறிந்திருக்கிறபடியால், அதற்கு செவி கொடுக்கிறது, அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை.” அவைகள் இந்த பாரம்பரியங்களுக்குச் செவிகொடுப்பதில்லை, அவைகள் கோட்பாடுகளுக்குச் செவிகொடுப்பதில்லை, ஒரு சரீரத்துக்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க புகுத்தப்பட்டிருக்கின்ற அந்த காரியங்களுக்கு அவைகள் செவிகொடுப்பதில்லை. தேவன், “ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்” என்றார். அப்போஸ்தல நடபடிகள் அல்லது எபிரெயரில், “ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்”, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை , ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்” என்றார். விசுவாசிகளுடைய ஒரு சரீரம், பிறந்திருக்கின்றதான ஒரு சரீரம். 39மனித வர்க்கத்தினுடைய ஒரு சரீரமாக இருப்பதற்கு முன்பாக, ஒரு மனிதனாக செயல்படுவதற்கு முன்பாக, ஒரு மனிதனைப் போல நடப்பதற்கு முன்பாக, ஒரு மனிதனைப் போல பேசுவதற்கு முன்பாக, நான் ஒரு மனிதனாகப் பிறந்திருக்க வேண்டும். நான் எப்படி செயல்பட்டேன் என்பதை ஒரு மரத்தின் மேலுள்ள முடிச்சுக்கு எப்படி தெரியும்? நான் அவ்விதம் செய்வதில்லை என்று எப்படி அவனால் கூறமுடியும்? அவனால் இருக்க முடிந்த ஒரே ஒரு வழி, என்னைப் போல பிறப்பதே. அங்கேதான் ஸ்தாபனமானது, பாரம்பரியத்தின் பின்னால் சென்ற காரணத்தினால், மக்களை புறம்பே இழுத்துவிட்டது. ஆனால் ஒரு தேவகுமாரனாயிருப்பதற்கு, நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்களாயிருக்க வேண்டும். பின்னர் நீங்கள் கிறிஸ்துவைப் போல (Christ-like) மாறி, கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் அந்த மக்களுக்கு வேடிக்கையாயிருப்பதில்லை. ஒரு மனிதன், மனிதனைப் போல நடந்துகொள்வது வேடிக்கையானதல்ல. ஆரம்பத்தில் இருந்த பெந்தெகொஸ்தே குழுவைப் பார்க்கிறீர்கள்; அதே பெந்தெகொஸ்தே குழுவானது, அதே ஆவியினால் பிறந்திருக்குமானால், அது அதே வகையில் செயல்படுகிறது, ஏனென்றால் அது பிறந்திருக்கிறது. அதனால்தான் மக்கள் இன்றைக்கு சபையைப் புரிந்துகொள்வதில்லை. அதே ஆவியினால் பிறந்த ஒரு கிறிஸ்தவன், ஒரு கிறிஸ்தவனைப் போல் நடந்து கொள்வது வேடிக்கையானதல்ல. சபையானது குளிராகவும் சம்பிரதாயமாகவும் வளர ஆரம்பித்து, கோட்பாடுகள் மற்றும் பாரம்பரியக் காரியங்களைப் பின்பற்றி, பரிசுத்த ஆவியை பின்தொடருவதை விட்டுவிட்டது. அது சரியே. 40மற்றவர்கள் எக்காளச் சத்தத்தை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு அடிமையானவன் தலைமுறை தலைமுறையாக அடிமையாயிருக்கிறான் என்று வேதம் இங்கே கூறுகிறது. நகரத்திற்குள் பிரவேசித்து ஆஸ்தியை வாங்கின ஒவ்வொருவரும், அவன் நிபந்தனைக்குட்பட்டிருந்தான், அவன் யூபிலியில் அவனுடைய காணியாட்சியை மீட்க முடியாமல் போனான். அது விடுதலையாகிப் போகவில்லை, அவனால் அதை மீட்கவும் முடியவில்லை. அது தலைமுறை தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாயிருந்தது. ஆகவே தான் இங்கே வேதமானது, அவன் நிச்சயமாகவே பட்டணத்தில் தனது ஆஸ்தியுடன் தரித்திருக்க வேண்டும், ஏனென்றால், அங்கேதான் அவனுடைய காணியாட்சியானது இருந்தது, பட்டணத்தில் இருந்தது என்பதாகக் கூறுகிறது. இப்பொழுது அவன் அதை விற்றுப்போட்டபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவன் அதற்கு திரும்பிப் போகும்படியாக விடுவிக்கப்படவில்லை. 41சில நாட்களுக்கு முன்பு, ஒரு முறை, நான் ஒரு மனிதனிடம் கேட்டேன். டாக்டர் பாஸ்வர்த், சகோதரன் பாஸ்வர்த்தை (Brother Bosworth) நீங்கள் ஞாபகம் கொண்டிருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அவர், “நான் கனடாவில் உள்ள டொரண்டோவில் (Toronto) ஒரு இரவில் ஒரு பெண்ணிடம், 'நீ ஒரு கிறிஸ்தவளா?' என்று கேட்டேன்” என்றார். அவள், “நான் உங்களுக்கு அதைப் புரிய வைக்கிறேன். நான் ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்” என்றாள். இதுபோல, பாருங்கள்! அவ்வளவுதான் அவள் கிறிஸ்துவத்தைக் குறித்து அறிந்திருப்பது. நான் ஒரு முறை ஒரு பெண்ணிடம் அவள் ஒரு கிறிஸ்தவளா என்பதாகக் கேட்டேன். அவள், “நான் அதை புரிய வைக்கிறேன், நான் ஒரு அமெரிக்கன்” என்றாள். நான், “அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே” என்று கூறினேன். நான் ஒரு முறை ஒரு பெண்ணுக்காக ஜெபிக்கும்படியாக இருந்தேன். அந்தப் பெண், “திரையை இழுத்து விடுங்கள்” என்றாள். நான், “நல்லது, நான் ஒரு ஜெபத்தை மாத்திரம் ஏறெடுக்கப் போகிறேன்” என்றேன். அவளோ, “அந்த திரையை இழுத்து விடுங்கள்” என்றாள். நான், “நல்லது, நீ ஒரு கிறிஸ்தவள் இல்லையா?” என்று கேட்டேன். அவள், “நாங்கள் மெத்தடிஸ்ட்டு” என்றாள். நான், “நீ ஒரு கிறிஸ்தவள் இல்லை என்பதை அது நன்றாகவே சாட்சிபகருகிறது'' என்று கூறினேன். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? 42பாருங்கள், நீங்கள், “நான் ஒரு மெத்தடிஸ்ட்” என்று கூறுவீர்களானால், அது ஒரு தூஷணமான நாமம். நீங்கள், “பாப்டிஸ்ட்” என்று கூறுகிறீர்கள், அது ஒரு தூஷணமான நாமம். நாம் அதற்கு “ஆமென்” என்று சொல்ல முடியும். ஆனால் சகோதரனே! நான் உங்களை ஒன்று கேட்கட்டும்: பெந்தெகொஸ்தேயினரைக் குறித்து என்ன? மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லையென்றால் அது இன்னும், முன்பிருந்ததையே மாதிரியாகக் கொண்ட ஒரு தூஷணமான நாமமாகவே இருக்கிறது. சரி, அது சரியே. பாருங்கள். அவர்களுக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவருக்குத் தெரியாது, ஐக்கியத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உங்களுடைய பாரம்பரியங்களே, ஒரு விடுதியைப்போல அதிலே தங்கியிருக்கிறார்கள், விடுதியைப்போல. நான்... நீங்கள் அவைகளை சார்ந்திருக்க விரும்பினால், விடுதிகள் என்பது பரவாயில்லை. ஆனால் அதை சபையுடன் தொடர்புபடுத்தாதீர்கள். சபை என்பது தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்பட்டு, பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த ஒரு கூட்ட விசுவாசிகளாயிருக்கின்றது. அவர்கள் உலகத்தாரல்ல, உலகத்திற்கு புறம்பானவர்கள், அவர்கள் உலகத்திலிருந்து வேறுபட்டவர்கள், அதுவே அவர்களை அவ்விதமாக இருக்கும்படிச் செய்கிறது. அவர்களுடைய ஜீவியம் மரித்ததாய், கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டும், கிறிஸ்துவுக்குள் மரித்தும் இருக்கிறார்கள், அவர்கள் மறைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டும் இருக்கிறார்கள், அவர்கள் உலகத்தின் காரியங்களுக்கு விலகி இருக்கிறார்கள். 43தலைமுறை தலைமுறையாக உள்ள அடிமைத்தனம்: ஒரு பெண், “நல்லது, நான் ஒரு லுத்தரன்” என்றாள். சரி. [சகோ. பிரன்ஹாம் தன் தொண்டை கரகரப்பை சரி செய்கிறார் - ஆசி] (என்னை மன்னியுங்கள்). “நான் ஒரு லுத்தரன், என்னுடைய தாயார் ஒரு லுத்தரன், என்னுடைய பாட்டனார் ஒரு லுத்தரனாயிருந்தார்.” அது சரி. அடிமைத்தனம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வழிவழியாக அளிக்கப்பட்டு, அவ்விதமே தொடர்ந்து இருக்கும். யூபிலியில் உங்களால் விடுதலையாகிப் போகவே முடியாது. நீங்கள் வார்த்தையைப் பிரசங்கித்திருக்கலாம், பரிசுத்த ஆவியானவர் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்துவதையும், குருடரின் கண்களைத் திறப்பதையும், அந்நிய பாஷை பேசி, வேதம் சொல்லுகிற விதமாய் வியாக்கியானம் செய்வதையும் கண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் எக்காளச் சத்தத்தை அறியாமலிருக்கிறீர்கள். சரியே! அது சத்தியமாயிருக்கிறது. அவர்களுக்கு எக்காளச் சத்தத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் விற்றுவிட்டார்கள், அவர்கள் தங்களுடைய சுதந்தரவீதத்தை மதில் சூழப்பட்ட பட்டணத்திற்குள் வைத்திருக்கிறார்கள். 44நம்முடைய பெந்தெகொஸ்தே சபையும் சரியாக அதேக் காரியத்தை செய்திருக்கிறது. அதை சரியாக மீண்டும் இணைக்கப்பட்ட நகரத்தில் (roped-in city) வைத்துவிட்டது, அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதில்லை. அவர்களோ, “அவர்கள் இந்த வழியாக வராமல் இருந்தால், அது எங்கள் குழுவுக்கு வராமல் இருந்தால், சரி, அப்படியானால் அது சரியான காரியமாயிராது. ஆனால், உங்களுடைய பெயர்கள் எங்களுடைய புத்தகங்களில் இல்லை , நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் போக முடியாது” என்கிறார்கள். உங்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் இருக்கிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பாக அது அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. அதை அகற்ற (rub) எதுவும் அங்கே இல்லை . “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அவைகள் ஒரு அந்நியனுக்கு பின்செல்வதில்லை.” ஆம் ஐயா! 45ஒரு செல்வந்தனான வேலைக்காரன்... ஒரு மனிதன் வந்து வேலைக்காரனாகி, பின்னர் செல்வந்தனாகி, ஒரு சகோதரனை விலைக்கு வாங்கினால், இப்பொழுது, அந்த சகோதரன், ஒரு இனத்தான் மூலமாக மீட்கப்பட முடியும். ஒரு இனத்தான் வந்து, யூபிலி வருடத்தில் அவனைப் பெற்றுக்கொண்டு மீட்டுக்கொள்ள முடியும். என்ன ஒரு அழகான கிறிஸ்துவை நாம் இங்கே கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவினுடைய ஒரு — ஒரு அழகான காட்சி. எப்படியாக ஒரு — ஒரு யாத்திரீகன் அங்கே அடிமைத்தனத்தில், அங்கே இருக்கிற ஐசுவரியமான பட்டணங்களுக்கு விற்கப்பட்டான், ஸ்தாபனத்தின் ஐசுவரியங்களுக்குள்ளாக விற்கப்பட்டான். ஆனால், அவன் அங்கே இருக்கிறான் என்பதை அறிந்திருக்கிற இனத்தானாகிய ஒரு சகோதரன், ஓரிரவில் தன்னுடைய தோளின் கீழாக வேதத்தை வைத்துக்கொண்டு, அவன் பின்னே செல்கிறான். ஒரு இனத்தான், அவன் அதே ஆவியை பெற்றிருக்கிறான், அதே குடும்பத்தில் அவன் பிறந்திருக்கிறான், அவனை அந்த குழுவிலிருந்து வெளியே அழைக்கும்படி செல்கிறான்! அவனே ஒரு இனத்தான் மீட்பன். எப்படியாக அந்தக் காட்சி ரூத்தின் புஸ்தகத்தை அழகாக சித்தரிக்கிறது: போவாஸ், ஒரு இனத்தான் மீட்பனின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்ட பொழுது, அது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 46இப்பொழுது, சபையானது இஸ்ரவேலைப் போல இருக்கிறது. சபையானது எகிப்திலிருந்து வெளியே வந்த இஸ்ரவேலைப் போல இருக்கிறது. இஸ்ரவேல் அங்கே எகிப்தில் இருந்தபோது, தேவன் தம்முடைய அற்புத கிருபையினால், எந்த ஸ்தாபனமோ அல்லது வேறெதைக்கொண்டோ அல்லாமல், இஸ்ரவேலை அதனுடைய ஆரோக்கியத்திற்கு அழைத்தார், அவர்களை அவர்களுடைய சுதந்தரவீதத்திற்கு அழைத்தார். அவர்... கிருபையானது அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளித்தது, கிருபை அவர்களுக்கு அக்கினி ஸ்தம்பத்தைக் கொடுக்கிறது, கிருபை அவர்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை, பலி ஆட்டை கொடுக்கிறது, கிருபை அவர்களுக்கு வல்லமையைக் கொடுக்கிறது, கிருபை அவர்களுக்கு விடுதலையைக் கொடுக்கிறது, கிருபை அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கிறது, கிருபை இந்த எல்லாக் காரியங்களையும் அவர்களுக்குக் கொடுக்கிறது, அவர்கள் அதைக்குறித்து தேவனைத் துதித்து, சத்தமிட்டு ஆவியில் நடனமாடினார்கள். அவர்கள் சவக்கடல் அல்லது யோர்தான் நதிக்கரையில் நடனமாடிக் கொண்டிருந்தபொழுது, தேசத்திலிருந்து இன்னும் அவர்கள் நாற்பது வருடம் தொலைவிலிருந்ததை அறியாதிருந்தார்கள். அதாவது, ஐந்து நாட்கள் தொலைவில் மாத்திரமே இருந்தனர். ஆனால் யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில் அவர்கள் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டனர். “நாங்கள் கைக்கொள்ள ஏதாவது எங்களுக்குக் கொடும்” என்று சொல்லி, அவர்கள் அங்கே கிருபைக்குப் பதிலாக நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அங்கே தேவனுடைய வழியை விட்டுவிட்டு, தங்களுக்கான ஒரு வழியைப் பெற்றுக் கொண்டனர். முற்றிலுமாக அது மனிதனுடைய திட்டமாகவே இருந்தது. 47இப்பொழுது, ஞாபகங்கொள்ளுங்கள், அது மனிதனுடைய திட்டமாகவே இருந்திருக்கிறது. இதுவே... அதுதான் மனிதனுடைய சுபாவம். ஆதாம் ஏதேன் தோட்டத்தில் அதையே வெளிப்படுத்தினான், அவன் இழக்கப்பட்டபோது, கிருபைக்காக தேவனிடத்தில் திரும்புவதற்குப் பதிலாக, அவன் தானாகவே அரைக்கச்சைகளை உண்டுபண்ண முயற்சித்தான். அப்பொழுதிலிருந்தே அவன் மீட்போடு ஏதோ ஒன்றைச் செய்ய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான், தேவன் மாத்திரமே தரக்கூடிய, கிருபையின் ஒரு இலவச வெகுமதியாக மீட்பானது இருக்கும் நிலையில் மீட்போடு ஏதோவொன்றைச் செய்ய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை இரட்சிக்க நீங்களாகவே எதுவும் செய்ய முடியாது, தேவனே உங்களை இரட்சித்தார். நீங்களாகவே செய்ய முடிகின்ற எந்த ஒரு சாத்தியக்கூறும் கிடையாது, ஆனால் மனிதன் அதில் ஏதோவொன்றைச் செய்ய விரும்புகிறான். இன்றைக்கு அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, உங்களுடைய தாய்மார்கள், தகப்பன்மார்கள், இன்றிரவு இருக்கின்ற பெந்தெகொஸ்தேயினர், இந்த பிரசங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் இவர், அந்தப் பண்டையக் காலத்தவர்கள், சத்தமிட்டு, தேவனைத் துதித்தபொழுது, அவர்கள் ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்தனர். நீங்கள் ஸ்தாபனங்களைக் குறித்து அவர்களிடம் பேசினால், உங்கள் முகத்துக்கு முன்பாக சிரிப்பார்கள், ஏன்? அவர்கள் விடுதலையடைந்திருந்தார்கள், ஆம் ஐயா! அவர்கள் சத்தமிட்டு தேவனைத் துதித்தனர், அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசினர், அவர்கள் அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களை உடையவர்களாயிருந்தனர், பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார், அவர்கள் கிறிஸ்துவை தத்ரூபமாகக் கண்டனர், அவர்கள் அதிசயங்களையும், மகத்தான அடையாளங்களையும் செய்தனர், அவர்கள் பாடுபட்டனர், அவர்கள் இரத்தம் சிந்தினர், அவர்கள் கசப்பான உபத்திரவத்தின் கீழாக சென்றனர், அந்தக் காரணத்திற்காகவே இவைகள் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். 48இப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்ரவேலர் செய்த அதேக் காரியத்தைச் செய்தார்கள், இவர்களும் செய்யக்கூடாத தவறைச் செய்தார்கள், அவர்கள் ஸ்தாபனம் ஆக்கிக்கொள்ள விரும்பினார்கள். அது இஸ்ரவேலுக்கு என்ன செய்தது? அது இஸ்ரவேலுக்கு என்ன செய்தது? அது... அவர்கள் — அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் மோசேயின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் தங்களை வழிநடத்த கோராகையும், தாத்தானையும், அதைப் போன்றவர்களையும் கூட எழுப்ப முயற்சித்தார்கள். தேவன் அவர்களுக்கு அளித்திருந்த வழிநடத்துதலை விரும்பவில்லை. மேலும் இன்றைக்கு தேவன் அளித்திருக்கின்ற வழிநடத்துதலை நாம் விரும்புவதில்லை அல்லது சபையானது விரும்புவதில்லை. வேறொரு வழியைக் குறித்து அவர்கள் சிந்திக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் கருத்தரங்குகளுக்குச் செல்கிறார்கள், தங்களுடைய மனிதர்களுக்கு கல்வி கற்பிக்கிறார்கள், பின்னர் ஒரு இறையியல் படிப்பு அனுபவத்துடன் திரும்பி வெளியே வருகிறார்கள். ஓ! நான் முக்கியத்துவம் அளிப்பது என்னவென்றால், ஒருபோதும் ஒரு — ஒரு வேத பாடசாலையில் இருந்திராத, அதைக் குறித்து ஒன்றும் அறியாத, துடைப்ப புற்கள் நிறைந்த மலைக்கு அப்பால் சென்று, வெட்டிய பின் மீதமுள்ள அடிமரக்கட்டைக்கு பின்பாக, பரிசுத்த ஆவியினால் தேவன் அவனை நிரப்பின அனுபவத்தைப் பெற்று, எனக்கு பிரசங்கிக்கும் ஒரு மனிதனே. நிச்சயமாக! அவன் ஆவியினால் வழிநடத்தப்படட்டும், அவன் ஒரு காந்தத்தைப் போல இருக்கிறான், தேவன் எல்லாவற்றையும் அவனிருக்கும் திசையை நோக்கித் திரும்பும்படி செய்வார், வேகமாக வீசுகிற காற்றில் எரிகிற ஒரு வீட்டைப் போல, அவனை மறைக்க முடியாது, நீங்கள் அவனை வெளியேற்ற முடியாது, அவன் எரிந்து கொண்டேயிருப்பான். அவன் கிறிஸ்துவுக்காக பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாது. ஆம்! 49இருப்பினும் அவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்ரவேல் செய்த அதேக் காரியத்தை அவர்கள் செய்தார்கள். ஓ! அவர்கள் ஜெயத்தைப் பெற்றிருந்தார்கள், அவர்கள் சத்தமிட்டார்கள், அவர்கள் நடனமாடினார்கள், அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக இங்கே லூசியானாவில் பெந்தெகொஸ்தேவில் அந்நிய பாஷையில் பேசினார்கள். ஆனால் இஸ்ரவேல் தாங்களாகவே ஏதோவொன்றைச் செய்ய விரும்பினது போல, பெந்தெகொஸ்தே சபையும் செய்தது; அவர்கள் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையை (Assemblies of God Church) ஸ்தாபித்தார்கள், அதற்குப் பிறகு மற்றொன்று வருகிறது, அது யுனைடெட் (United) என்று அழைக்கப்படுகிறது என்று நம்புகிறேன், அல்லது அதைப் போன்ற ஒன்று. பின்னர் அதைத் தொடர்ந்து வேறொன்று வந்தது, பின்னர் வேறொன்று, பின்னர் வேறொன்று, பின்னர் வேறொன்று, அப்படியாக இன்றைக்கு அது இருக்கும் நிலைவரைக்கும் காண்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா? இஸ்ரவேல் செய்த அதேக் காரியம்தான். தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட திட்டத்தை, அவர்கள் புறக்கணித்தபோது, அவர்கள் அலைந்து திரிய ஆரம்பித்தனர். அதைத்தான் சபையானது இன்றைக்கு செய்திருக்கிறது, எல்லாவற்றையும் தங்களுடைய ஸ்தாபனங்களுக்குள் கொண்டு வந்து, அதிலேயே அலைந்து திரிகின்றனர், அதாவது, புகைப்பிடிப்பவர்களையும், நான்கு அல்லது ஐந்து முறை திருமணமான பரிசுத்தமற்ற ஜனங்களையும், மற்றும் மற்றெல்லாவற்றையும் உள்ளே கொண்டுவந்து, அவர்களை பிரசிங்கிக்கும்படி அனுமதித்து, ஒரு இரவில் ஏதோ ஒரு மன்றமாளிகையில் (rat house) நாட்டுப்புற பாடல்களை பாடும் ஒரு பாடகனை (hillbilly singer) கொண்டுவந்து, அடுத்த இரவில் சபையின் மேடையின்மேல் பாடும்படி செய்கிறார்கள். ஏன், அப்படிப்பட்டக் காரியங்களை நினைத்துப் பார்ப்பதுகூட ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு ஒரு அவமானமாயிருக்கிறது, நிச்சயமாக. 50அவர்கள் என்ன செய்தார்கள்? அது தூஷணமான நாமங்களைக் கொண்டு வந்தது, புனிதமாக இருக்கவேண்டிய பெந்தெகொஸ்தே என்ற அந்தப் பெயரை தூக்கியெறிந்தது, “அவன் ஒரு பெந்தெகொஸ்தே, அவள் ஒரு பெந்தெகொஸ்தே, அவர்கள் பெந்தெகொஸ்தேயினர், அவர்கள் செய்கிற, நடந்து கொள்ளுகிற விதத்தைப் பாருங்கள்” என்று சொல்லப்படுகிற காரணத்தால், பெந்தெகொஸ்தேவை அந்த இடத்திற்கு அது தூக்கி எறிந்துவிட்டது. அது சரியே. தூஷணமான நாமங்கள்! நிச்சயமாக! அதுவே சத்தியமாயிருக்கிறது. ஆம் ஐயா! அவர்கள் அதைச் செய்தபோது, ஒரு செய்யக்கூடாத தவறைச் செய்து, நாற்பது வருடம் அலைந்து திரிந்தனர், சரியாக அதைத்தான் அவர்கள் செய்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து ஐந்து நாட்கள் தொலைவில் கூட அவர்கள் இல்லாத நிலையில், நாற்பது வருடங்களாக அலைந்து திரிந்தனர். செங்கடலிலிருந்து யோர்தானைக் கடந்த இடம்வரை வெறும் நாற்பது மைல்கள் தூரமே, சுமார் நாற்பது மைல்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் நடந்து சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றிருக்க முடியும், ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதலைச் செய்தார்கள் 51தேவன் பிதாக்களை அவர்களுடைய ஸ்தாபனங்களிலிருந்து வெளியே கொண்டு வந்தார், அவர்கள் அந்த பரிசுத்த ஆவியுடன் தரித்திருந்து, அதை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்களானால், சபையானது இன்றிரவு, கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாத மகிமையுள்ள சபையாக இருந்திருக்கும். ஆனால், நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளுவது போலவும், அவர்கள் சரியாக அதற்குள் திரும்பிச் சென்றார்கள். இப்பொழுது, நாம் மற்றுமொரு ஐம்பது வருடங்களாக அலைந்திருக்கிறோம், வனாந்தரத்தில் சுற்றித் திரிகிறோம். ஆனால் தேவன், “நீங்கள் இந்த மலைநாட்டை சுற்றித்திரிந்தது போதும், வாருங்கள், நாம் அங்கே போய்க்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லும்படியான ஒரு நேரம் வருகிறது. அது இந்த யூபிலியில், லூசியானாவிற்கான ஒரு அனுபவமாக இருப்பதாக. “நீ போய் அதைச் செய், நான் இதைச் செய்கிறேன். நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றால், உங்களுடன் எந்தத் தொடர்பும் எங்களுக்கு இல்லை. நீ அதைச் செய்துகொள், நாங்களோ இதை, அந்த மற்றொன்றைப் பெற்றுக் கொள்வோம்” என்று கூறின அந்தப் பழைய சண்டைக்காரர்கள் மரித்த போது, அவர்கள் செய்தவிதமாக, அந்த சண்டைக்காரர்களின் அடுத்த தலைமுறையான (their sons) இச்சந்ததியின் மக்களோடு தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் மீண்டும் பேசக்கூடிய ஒரு அனுபவமாக இது இருப்பதாக. அந்தப் பழைய சண்டைக்காரர்கள் மரித்துப் போனார்கள். அது சரியே. இதுவே எழும்புகிற நேரமாய் இருக்கிறது, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே தேவகுமாரர்களாய் இருங்கள், இந்த யூபிலியில், உங்களால் திரும்பி வரமுடியும் என்ற ஒரு இடத்திற்கு எழும்பிவாருங்கள், மேலும், தேவனுடைய வார்த்தையின் சுவிசேஷத்தின் எக்காளச் சத்தத்தைக் கேளுங்கள். நீங்கள் சகோதரர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சகோதரர்களாயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஸ்தாபிக்கப்பட முடியாது. நீங்கள் தேவகுமாரர்களாகவே பிறந்திருக்கிறீர்கள். அந்த அடிமைகள் மதில் சூழப்பட்ட பட்டணத்தில் தங்கியிருக்க விரும்பினால், அவர்கள் தங்கியிருக்கட்டும். ஆனால் நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள், ஆமென். நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். நாம் திரும்பிச் செல்லுவோம், நம்முடைய சுதந்தரவீதத்திற்கு நாம் திரும்பிச் செல்லுவோம். துவக்கத்திற்கு திரும்பிச் செல்லுவோம். “அவர்கள் பரிசுத்த ஆவியின் ஊக்குவித்தலால் நடத்தப்படுகிறார்கள்'' என்கிற துவக்கத்திற்கு திரும்பிச் செல்லுவோம். 52அந்த வழியில் தான் அவர்கள் ஒரு தவறைச் செய்தார்கள். மீண்டும் ஒரு முறை இஸ்ரவேல் அதைச் செய்தது. பொதுவாகவே ஜனங்கள் செய்கின்ற ஒரு காரியமாக அது இருக்கிறது. ஒருமுறை இஸ்ரவேல், அவர்களுக்கு பங்கிடப்பட்ட சுதந்தரவீதத்தைப் பெற்ற பிறகு, சுற்றிலும் பார்த்து, உலகத்தாரைப் போல இருக்க விரும்பினார்கள், அவர்கள் ஒரு ராஜாவை விரும்பினார்கள். அந்த வயதான தீர்க்கதரிசி... “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் வந்தது'' என்பதற்கிணங்க, தீர்க்கதரிசிகள் எப்பொழுதும் ஜனங்களிடத்தில் பேசுவதற்கான தேவனுடைய வழியாக அமைந்திருந்தார்கள். அவர்களுக்கு சத்தியத்தை சொன்னவர் தீர்க்கதரிசியாயிருந்தார். சாமுவேல் எழுந்து நின்று, அவன், “நான் எப்பொழுதாவது உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டேனா? அல்லது கர்த்தருடைய நாமத்தில் நான் கூறினது ஏதாவது நிறைவேறாமலிருந்ததா?” என்று கேட்டான். அவர்கள், “அது சத்தியமாயிருக்கிறது, நீர் எங்களுடைய பணத்தை எடுத்துக்கொள்ளவில்லை, அல்லது எங்களுடைய வாழ்வாதாரத்தை (livings) நீர் அபகரிக்கவில்லை , உடைமைகளுக்காக எங்களிடம் நீர் கெஞ்சினதில்லை. சத்தியத்தைத் தவிர வேறெதையும் நீர் கர்த்தருடைய நாமத்தினால் எங்களுக்கு கூறினதில்லை ” என்றார்கள். அதற்கு அவன், “அப்படியானால், அந்தக் காரியங்களை விட்டு விலகியிருங்கள். உங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமா? தேவனே உங்கள் இராஜாவாயிருக்கிறார்” என்றான். 53மேலும், அது தேவனை அதிருப்திக்குள்ளாக்கினது. சாமுவேல் கர்த்தருக்கு முன்பாக அழுதான். கர்த்தர், “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, சாமுவேலே, அவர்கள் என்னைத்தான் தள்ளினார்கள், அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளட்டும், நான் உன் மூலமாக கிரியை செய்யத்தக்கதாக நீ வெறுமனே ஒரு கருவியாக மாத்திரம் இருக்கிறாய்” என்றார். சரியாக அவர்கள் அதைத் தான் பெற்றுக்கொண்டார்கள். துயரம் அதைப் பின்தொடர்ந்தது என்று நாம் பார்க்கிறோம், தேவனே அவர்களுடைய இராஜாவாயிருக்கிறார். தேவன் நம்முடைய இராஜாவாயிருக்கிறார், பரிசுத்த ஆவி நம்முடைய தலைவராயிருக்கிறார். அது பரிசுத்த ஆவியாயிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைக் காண, வழிகாட்டும் வேதாகமமாகிய அதனோடு, தேவன் நமக்குத் தந்தருளுகிற பரிசுத்த ஆவியோடு தரித்து நிற்போம். பரிசுத்த ஆவியானது இங்கே ஒன்றை வாக்குத்தத்தம் செய்து விட்டு அங்கே அதை மறுதலிக்க முடியாது. தொடர்ந்து தேவனாயிருப்பதற்கு, பரிசுத்த ஆவியானவர், தான் என்ன கூறினாரோ சரியாக அதைக் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். சரி! அது பரிசுத்த ஆவியாகவே இருக்க வேண்டும், அவ்வாறே இருக்க வேண்டும். ஆம். சாமுவேல் கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றவனாயிருந்து, அவர்களிடம் அதைக் கூறினபொழுது, அவர்கள் சாமுவேலை நம்ப விரும்பவில்லை. இஸ்ரவேல் சத்தமிட்டு, நடனமாடினர், நிச்சயமாகவே அவர்கள் ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாய் இருந்தனர். ஆனால், அவர்கள் நாற்பது வருடங்களாக சுற்றித் திரிந்தவர்களாகக் காணப்பட்டனர். இப்பொழுது, நம்முடைய சுற்றித் திரிதலில் ...... வனாந்தரத்தில் அங்கே அவர்கள் என்ன செய்தார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இஸ்ரவேல் என்ன செய்தது என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் தங்களுடைய பயிர்களை, தோட்டங்களை உடையவர்களாய் இருந்தனர், அவர்கள் தங்களுக்கு மனைவிகளைக் கொண்டனர், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்தனர், நிச்சயமாக அவர்கள் அதைச் செய்தனர். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். மேலும், தேவன் பெந்தெகொஸ்தே அசைவை ஆசீர்வதித்திருக்கிறார். அவர்... நிச்சயமாக. ஆனால் ஞாபகங்கொள்ளுங்கள், அதற்காக தேவன் அவர்களை அனுப்பவில்லை, அந்த வனாந்தரத்தில் வாழ்க்கை நடத்த தேவன் அவர்களை அனுப்பவில்லை, அவர்கள் வனாந்தரத்தைக் கடந்து செல்ல வேண்டியவர்களாய் இருந்தார்கள், அவர்கள் தங்களுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான பாதையில் இருந்தார்கள். சபையானது முழு வாக்குத்தத்தத்திற்குச் செல்ல வேண்டியதாயிருந்தது. சபையானது இன்றிரவு அவளுடைய மகிமையின் ஒளியில் இருந்திருக்கவேண்டும், அவள் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக எது சரியென்று சுற்றித்திரிந்து, “அது சரியானதா? இது சரியானதா? நான் இதைச் சேர்ந்து கொண்டு அங்கே செல்வேன் மற்றும் இங்கே செல்வேன்” என்று கூறி அவள் எங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள். ஓ, திரும்புங்கள்! அந்தக் காரியங்களை விட்டு வெளியே வாருங்கள். 54இப்பொழுது அது நமக்கு என்ன செய்திருக்கிறது? அவர்களை வனாந்தரத்திலேயே தங்கியிருக்க செய்தது, அதைத்தான் அது அவர்களுக்குச் செய்தது. நாம் எங்கிருந்து வெளியே வந்தோமோ, அதே வாந்திக்கு அது நம்மை திரும்பவும் கொண்டு வந்திருக்கிறது, நாம் நம்மை ஸ்தாபனமாக்கிக் கொண்டோம் மற்றும் நாம் வெளியே வந்த சரியான அதே குழப்பத்திலேயே அது நம்மை திரும்பவும் வைத்திருக்கிறது. தேவன் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தைக் கொண்டிருந்ததில்லை என்றும், ஒருபோதும் ஒன்றை ஸ்தாபித்ததில்லை என்றும் அதுபோன்ற எதைக் குறித்தும் பேசினதில்லை என்றும், ஆனால் எப்போதும் அதற்கெதிராகவே இருக்கிறார் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? தேவன் மனிதர்களை நடத்த விரும்புகிறார். மனிதர்கள் தங்களைத் தாங்களே நடத்திக் கொள்ள முடியாது. அவர்களோ, “நாங்கள் அநேக ஆலோசனைகளை உடையவர்களாயிருக்கிறோம்” என்று சொல்லுகிறார்கள். ஒருமுறை யோசபாத் ஆகாபை சந்திக்கப் போய், அவர்கள், “நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்போம்” என்று கூறினபோது, அது ஒரு மிகப்பெரிய போலி என்று நிரூபிக்கப்பட்டது. “அங்கேயிருக்கிற கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதாயிருக்கிறது, கர்த்தர் அதை நமக்கு தந்தருளினார். எபிரேயப் பிள்ளைகள்தான் அங்கேயிருக்கிற கோதுமையை சாப்பிடவேண்டியவர்கள், ஆனால் அதற்கு பதிலாக எதிரிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அங்கே செல்ல வேண்டும் என்று நீர் நினைக்கவில்லையா?” என்று சொல்லப்பட்டது மிகவும் வேதப்பூர்வமானதாக காட்சியளித்தது. யோசபாத் கூறினான்... தவறான சகவாசத்தில் ஒரு நல்ல மனிதன். அந்தவிதமாகத்தான் இன்றிரவு அருமையான ஜனங்களாக, பெந்தெகொஸ்தே குழுக்கள், மெத்தடிஸ்ட், பாப்டிஸ்டுகள் மற்றும் அதை போன்றவைகள் இருக்கின்றன. பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல, பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவமாயிருக்கிறது. பாருங்கள்? அநேக நல்ல ஜனங்கள் தவறான கூட்டணியில் இருந்து, அந்த கோட்பாடுகளுக்கு செவிகொடுத்து, வார்த்தையைப் புறக்கணித்தார்கள், அது சரியாக இருக்கிறது. கவனியுங்கள், யோசபாத், “நாம் கர்த்தரிடத்தில் ஆலோசிக்க வேண்டாமா?” என்றான். 55அதற்கு அவன், “கண்டிப்பாக, நான் அதை அறிந்து கொள்ள வேண்டும், ஓ, நிச்சயமாக, என்னை மன்னியுங்கள். நான் இங்கே நானூறு அருமையான எபிரேய தீர்க்கதரிசிகளைக் கொண்டிருக்கிறேன். நான் அங்கே சென்று, அவர்களை அழைத்து வரட்டும்” என்றான். ஆகவே, அவன் அங்கே சென்றான். அவர்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். சிதேக்கியா அவனுக்காக இரண்டு கொம்புகளை எடுத்தவனாய், “நீங்கள் ஜெயிப்பீர்கள் (go on up)” என்றான். நியாயமானதாக அது தோற்றமளித்தது (sound logical), நிச்சயமாகவே. அவர்கள், “தேவன் அந்த தேசத்தை நமக்குக் கொடுத்தார், அது நம்முடையதாயிருக்கிறது'' என்றார்கள். ஆனால், அதனோடு உடன்பட்ட வேறொரு காரியம் அங்கே உள்ளது, அந்த தேசத்தில் தரித்திருப்பதற்கு, நீங்கள் கட்டாயமாக தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்த விதமாகத்தான், இன்றிரவு பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் உங்களை ஸ்தாபித்துக் கொண்டு, உங்களை வேறுபிரித்துக் கொண்டபோது, தேவனுக்குக் கீழ்படியாமற்போனீர்கள். நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதாகவே தோன்றுகிறது. நீங்கள் பெந்தெகொஸ்தேயினராக இருக்கலாம். ஆனால், பெயரில் நீங்கள் பெந்தெகொஸ்தேவாக இல்லாமல், கிறிஸ்துவின் ஜீவன், தேவனுடைய வார்த்தை உங்களுக்குள்ளாக பாய்ந்து, அது தன்னை ரூபகாரப்படுத்தி, அது தேவனாயிருக்கிறது என்றும், தேவன் உங்கள் மூலமாய் கிரியை செய்கிறார் என்றும், கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது என்றும் நிரூபிக்கத்தக்கதான அதுபோன்ற நிலைகளின் கீழாகத்தான் நீங்கள் பெந்தெகொஸ்தேவாக இருக்க வேண்டும். 56இப்பொழுது, நாம் அதை அறிந்திருக்கிறோம்.... அவன், “நல்லது, அந்த...'' அவர்களெல்லாரும், ”போம், கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அங்கே சென்று அவர்களை அந்த தேசத்திலிருந்து துரத்திவிடுங்கள், அது நம்முடையதாயிருக்கிறது'' என்றார்கள். இது யோசபாத்திற்கு சரியானதாக தென்படவில்லையென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவன் ஒரு ஆவிக்குரிய மனிதனாயிருந்தான். அவன், “நாம் விசாரித்து அறிகிறதற்கு வேறேயாராகிலும் இங்கே இல்லையா?” என்று கேட்டான். “அனைத்து ஸ்தாபனமும் இங்கே இருக்க, அனைத்து பிஷப்புகளும், குருமார்களும் மற்றும் அனைவரும் இங்கே இருக்க, ஏன் வேறொருவருடன் ஆலோசிக்க வேண்டும்? அவர்களெல்லாரும் இங்கேதான் நின்று கொண்டிருக்கிறார்கள். மற்றுமொருவர் எதற்காக?” அவன், “ஆனால் நிச்சயமாக, இன்னும் ஒருவன் இருக்கிறான்” என்றான். மேலும் அவன், “ஆம், நான் ஆலோசிக்கிற ஒருவனைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அவனை நான் வெறுக்கிறேன்'' என்றான். ஏன், உறுதியாக! நிச்சயமாகவே அவன் அவனை வெறுத்தான். அவன் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தான். மேலும், ”அவன் இம்லாவின் குமாரன் மிகாயா என்பவன். வெகு காலத்திற்கு முன்பே ஸ்தாபனமானது அவனை புறம்பாக்கிவிட்டது, அவனுடன் எந்த ஐக்கியமும் கொள்வதில்லை“ என்றான். யோசபாத், “அவன் சொல்வதைக் கேட்போம்” என்றான். அவன், “ஓ! நான் அவனை வெறுக்கிறேன்” என்றான். யோசபாத், “ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம், ஆனால் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்போம்” என்றான். பிறகு, மத குருமார்கள் சிலர் அவனிடம் ஓடி, “அனைத்து பிஷப்புகளும், எல்லோரும் இன்னின்னதைச் சொன்னோம். நீயும் அதேக் காரியத்தைத்தான் கூற வேண்டும்” என்றார்கள். அதற்கு மிகாயா, “தேவன் என் வாயில் அருளுவதையே நான் கூறுவேன்” என்றான். ஆமென்! “ஆமென்” என்ற கோரஸை நமக்காகப் பாட சகோ. செப் (Brother Zepp) கட்டாயம் இங்கிருக்க வேண்டும். ஆம் ஐயா! தேவன் உங்கள் வாயில் என்ன அருளுகிறாரோ அதையே சொல்லுங்கள், அவர், அவருடைய வார்த்தையைத் தவிர வேறொன்றையும் சொல்ல மாட்டார். ஒரு தீர்க்கதரிசி, ஒரு முன்னறிவிப்பாளனைப் போல காரியங்களை முன்கூட்டியே அறிவிப்பவனாய் இருக்கிறான், உண்மை. ஆகவே அவன், “தேவன் என்ன கூறுகிறாரோ அதையே நான் கூறுவேன்” என்றான். பின்னர் அவன் தன்னுடைய தரிசனத்தை ஒப்பிட்டுப் பார்த்து, “இன்றிரவு கர்த்தர் என்ன கூறுகிறார் என்பதை பார்க்கட்டும்” என்றான். மறுநாள் காலையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாய் வெளியே வந்தான். 57ஏன்? அவனுக்கு முன்பிருந்த உண்மையான தீர்க்கதரிசியிடம் கர்த்தருடைய வார்த்தை வந்தது என்பதையும், அது சரியானதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் மிகாயா அறிந்திருந்தான். அவன் (எலியா) ஆகாபை சபித்து, அவன் இரத்தத்தை நாய்கள் நக்கும் மற்றும் வயல்வெளியில் யேசபேலின் மாமிசம் சிதறடிக்கப்படும் என்பது போன்றவைகளையும் அவன் கூறியிருந்ததை ஒப்பிட்டுப் பார்த்து, மாய்மாலமாய் இருக்கும் இந்த வகையறாவிலிருந்து எந்த ஒரு நன்மையும் வராதென்பதையும் மிகாயா அறிந்து கொண்டான். சபையானது தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டிருக்கும் வரையிலும், மற்றும் அந்த ஒருபுறத்தில் சபையானது தன்னை இணைத்திருக்கும்வரை, அதாவது தேவன் சபித்திருக்கிறார் என்பதை காலங்கள் தோறும் அவர் நிரூபித்திருக்கிற அந்த ஒருபுறத்தில் சபையானது தன்னை இணைத்திருக்கும்வரையிலும் தேவன் அவளை ஆசீர்வதிக்கவே மாட்டார் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். மெத்தடிஸ்ட், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன், லுத்தரன், கேம்பெல்லைட்ஸ் (campbellites), மேலும் அது போன்ற என்னவாக இருந்தாலும், இவற்றின் மூலமாக தேவன் ஒரு எழுப்புதலைக் கொடுத்தார் என்பதை அறியும்படியான ஒரு கூட்ட மக்களை எனக்குக் காண்பியுங்கள். அவர் ஒரு கூட்ட மக்களை எழுப்பி ஒரு எழுப்புதலை ஏற்படுத்தினபோது, அவர்கள் தங்களை ஸ்தாபித்துக் கொண்டவுடனே அவர்கள் மரித்தவர்களாகி, மீண்டும் எழும்புவதேயில்லை. தேவன் சபித்ததை எப்படி அவர் ஆசீர்வதிக்க முடியும்? ஓ, லூசியானாவே! திரும்பு, இது யூபிலி ஆண்டாய் இருக்கிறது. உங்களுடைய சொந்தமானதிற்கு திரும்புங்கள், உங்களுடைய சுதந்தரவீதத்திற்கு திரும்புங்கள், நிச்சயமாக! 58கவனியுங்கள், பிறகு அவன் (ஆகாப்) மலையின் மேல் சென்று, தன் ஜீவனை இழந்தான். சரியாக, ஏனெனில், கவனியுங்கள், மிகாயா தன்னுடைய தரிசனத்தை தேவனுடைய வார்த்தையுடன் சரியாக ஒப்பிட்டுப் பார்த்தான் என்பதை அறிந்தவனாய் தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தான். நிச்சயமாக! அது நமக்கு என்ன செய்திருக்கிறது? அதேக் காரியத்தைச் செய்திருக்கிறது. நாம் பாதுகாப்பிற்காக திரளான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம். அது நம்மை வேத வசனத்தின் வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. நான், “யூதாஸ் நான்று கொண்டு செத்தான், நீயும் போய் அந்தவிதமாகவே செய்” என்று கூறமுடியும். ஆனால், அது வேத வசனத்தில் சரியாக பொருந்தவில்லை . நீங்கள், அது என்ன கூறுகிறதோ அதை சரியான விதத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அதற்கு எந்த தனிப்பட்ட வியாக்கியானமும் கிடையாது. அது கூறுகிற விதமாக அதை வாசிக்க வேண்டும். அந்த வழியாகத்தான் அது இருக்க வேண்டும், அதன் பின்னர் எப்பொழுதுமே நீங்கள் அதற்கு திரும்பி வர இயலும். அவர், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற தம்முடைய வார்த்தையின் மேல் கவனமாயிருக்கிறார். தேவன் அதைக் கனப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். 59நமக்கு அது என்ன செய்திருக்கிறது? முதல் காரியம், அது நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்திவிட்டது. அது நமக்கு என்ன செய்திருக்கிறது என்பதைக் குறித்து இங்கே பத்து பக்கங்களுக்குக் காரியங்களைப் பட்டியலிட்டு எழுதி வைத்திருக்கிறேன், அவற்றில் சிலவற்றை நான் விட்டுவிடுகிறேன். முதல் காரியம், அது நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்திவிட்டது. ஏனென்றால், அது நம்மை பிரித்துவிட்டது. வேறொரு ஸ்தாபனத்தில் இருக்கிற மற்றொரு சகோதரன், நாம் செய்த அதேக் காரியத்தைச் செய்து, பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷைகளைப் பேசுவதை நாம் கண்டும், அவன் நம்முடைய குழுவை விசுவாசிக்காத காரணத்தால் அவன் ஒரு பண்டைய மாய்மாலக்காரனாயிருக்கிறான் என்று போதிக்கப்பட்டிருக்கிறோம். வேதமானது, “நாம் பிரிவினைகள் இல்லாமல், ஏக நம்பிக்கையிலும், உபதேசத்திலும் ஒன்றாக, நாமெல்லாரும் ஒரே சரீரமாயிருக்கிறோம், அன்பில் இணைந்திருக்கிறோம்” என்று கூறுகிறது. அது நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தி நம்மை செயலற்றவர்களாக்கிவிட்டது (paralyzed). ஆம் ஐயா. அது என்ன செய்தது? கழுகுகளிலிருந்து கோழிகளை உண்டாக்கியிருக்கிறது — வானத்துக்குரிய பறவைகளிலிருந்து பூமிக்குரிய பறவைகளாக. நல்லது, கோழியும் ஒரு — ஒரு பறவைதான் என்பதெல்லாம் சரிதான், ஆனால் அது பூமிக்குரியதாயிருக்கிறது, அது மரநாய்கள் வந்து அதனுடைய முட்டைகளை உடைத்து, அதன் குஞ்சுகளையும் மற்றவைகளையும் கொல்ல கூடிய இடத்தில் இங்கே கீழே தன்னுடைய கூட்டைக் கட்டுகிறது, ஆனால் கழுகானது தன்னுடைய கூட்டை எந்தவொன்றும் தொடமுடியாத மிக உயரத்தில் அதைக் கட்டுகிறது. 60தேவன் தமது பிள்ளைகளை, கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது சரியே. நாம் கழுகுகளை அல்ல, ஒரு கூட்ட பெந்தெகொஸ்தே கோழிகளையே பெற்றிருக்கிறோம். அதை செய்தது எது? நாம் கொடுக்கிற கோழிகளுடைய உணவே அதைச் செய்தது. ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தை அல்லாத சில வகையான பாரம்பரியங்கள் அல்லது ஸ்தாபனங்கள் போன்றவைகள் தான் அதைச் செய்தது. நாம் அதை திடீர் அசைவிற்கு உட்படுத்தி (twitched it), அதைத் திசைத்திருப்பி, ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க, அதிலிருந்து எதைக் கொண்டுவர விரும்பினோமோ, அதையே செய்தோம், ரோம சபை செய்ததுபோல, சரியாக அதில் கோட்பாடுகளை சேர்த்தோம். அவள் வேசிகளுக்கு தாயாக இருந்தாள் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. 61ஆம் ஐயா! அவர்கள் அவைகளுக்கு ஸ்தாபனங்களின் பாரம்பரியமாகிய கோழிகளின் உணவைக் கொடுக்கிறார்கள், அவர்கள் அதிலேயே ஜீவிக்கிறார்கள், அவர்கள் அறிந்ததெல்லாம் அவ்வளவுதான். அவைகள் பூமிக்குரியவைகளாயிருக்கின்றன. அவைகளுக்கு, தங்கள் கால்களை உயர்த்தவும், தங்களுடைய ஜெயத்தை உரிமைகோரவும், தேவனுடைய பிரசன்னத்தில் எழும்பவும் தெரிவதில்லை . எப்படி தேவனைத் துதித்து சத்தமிடுவது என்றும், அதற்கு தெரிவதில்லை. தெய்வீக சுகமளித்தலை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் அதற்கு தெரிவதில்லை . நீங்கள் அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது, ஒரு கோவேறு கழுதையைப் போல கணைப்பார்கள். நான் அந்தவிதமாக... ஒருவேளை நான்... நான் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னியுங்கள். நான் தவறாக எதுவும் சொல்ல முயலவில்லை . நான் குறிப்பிட விரும்புகிற கருத்து என்னவென்றால், நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசும்போது, அவர்கள் அதற்கு தங்களுடைய முதுகைக் காட்டுகிறார்கள், ஓ, நம்முடைய பெந்தெகொஸ்தே குழுவினரும் அதை மறுதலிக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க சபை தான் முதல் பெந்தெகொஸ்தே சபையாயிருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இரண்டாயிரம் ஆண்டுகளானது அவளுக்கு இந்த நிலையைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை அது இருந்திருக்கிற வழியில் செல்லவிடுங்கள். இப்பொழுதிலிருந்து நூறு வருடத்தில் ரோமன் கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மோசமான நிலையை அடைந்திருக்கும். சேர்க்கப்படுகிறப் பாரம்பரியங்களும் கோட்பாடுகளுமே அதைச் செய்கிறது. கழுகுகளுக்குப் பதிலாக நீங்கள் கோழிகளை உருவாக்குகிறீர்கள். தேவன் — தேவன் யேகோவா கழுகாக இருக்கிறார். இந்தச் சிறியவைகள் ஒவ்வொன்றும் கழுகு குஞ்சுகளாயிருக்கிறது. சகோதரனே, அவைகள் இங்கே சென்று கொண்டிருக்கிற இந்த விதமான எல்லா குழப்பத்திற்கும் (wick-wack) மேலாக, அங்கே நீலநிற ஆகாயத்தில் எப்படி பறப்பது என்பதை அறிந்திருக்கிறது. அவைகள் உங்கள் கொல்லைப்புற சபைகள் (barnyard assemblies) எதையும் விரும்பவில்லை . தூய்மையான புதிய காற்றை சுவாசித்தபடி, நட்சத்திரங்கள் இருக்கிற உன்னதங்களில் அவைகள் பறக்கின்றன. ஆம், ஐயா! ஓ, சரி. 62அவர்கள் நமது சபைகளை நவீனப்படுத்தியுள்ளனர். அதைத்தான் அவர்கள் செய்துள்ளனர், மற்றும் வேறொரு காரியத்தையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், நம்முடைய பெண்களுக்கு ஒழுக்கமின்மையை கொண்டு வந்திருக்கிறார்கள், சரியாக. நம்முடைய மனிதர்கள், நம்முடைய சகோதரர்கள், அவர்களை ஸ்தாபனங்களில் வைத்து, “நீங்கள் செய்யாவிட்டால்... நாங்கள் அதைக் கொடுத்தால்.... உங்களிடமிருந்து உங்களுடைய ஐக்கியத்தின் அட்டையை நாங்கள் எடுத்துவிட்டால், ஏன், நீங்கள் யாருக்கும் பிரசங்கம் பண்ண முடியாது, இல்லையென்றால் நாங்கள் உங்களை அச்சுறுத்துவோம். நாங்கள் உங்களைப் புறக்கணிப்போம்” என்கிறார்கள். அவர்கள் பயந்திருக்கிறார்கள், அதுவே அவர்களிடமிருந்து கோழிகளை உருவாக்குகிறது. சகோதரனே, தளர்வானவைகளை உதறிப் போடுங்கள். திரும்பி வாருங்கள், இது யூபிலியாயிருக்கிறது, நீங்கள் ஒரு கழுகாயிருக்கிறீர்கள்; நீங்கள் ஒரு பருந்து என்றும், அல்லது கோழியாயிருக்கிறீர்கள் என்றும், ஒருவரும் சொல்ல அனுமதிக்காதீர்கள். என்னை மன்னியுங்கள், நல்லது, நீங்கள் ஒரு பருந்தாகவும் ராஜாளியாகவும் கூட இருக்கலாம். ஆம் ஐயா! நீங்கள் ஒரு கழுகாயிருக்கிறீர்கள். ஆம் ஐயா. நீங்கள் அந்தப் பழைய மரித்துப்போன பாரம்பரியங்களைக் குறித்தும், ஸ்தாபனங்களைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். திரும்பி வாருங்கள், நாம் கழுகாயிருக்கிறோம். நாம் உன்னதங்களில் பறக்கிறோம். ஆமென். 63ஒரு கழுகானது, மற்றெந்த பறவையும் செல்ல நினைக்க முடியாத உயரத்திற்கு பறக்க முடியும். கழுகை மற்ற பறவைகள் பின்தொடர முயற்சித்தால், அவைகள் உருக்குலைந்து விடும். ஆம், உண்மையில் ஒரு கழுகு தன் உடலமைப்பில் விசேஷமாக கட்டமைக்கப்பட்ட பறவையாயிருக்கிறது. தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிற ஒரு மனிதன், விசேஷமாக வடிவமைக்கப்பட்ட மனிதனாக இருக்கிறான் அல்லது ஸ்திரீயாக இருக்கிறாள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லேலூயா! என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கிற ஆவியை, தேவ குமாரனாயிருப்பதற்கு தங்களுக்குள்ளே பெற்றவர்களாய் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆமென், அது உண்மையாயிருக்கிறது. அது சத்தியம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆம், ஐயா, நாம் அதைப் பெற்றிருக்க வேண்டியதில்லை என்று... நம்முடைய பெண்கள், தங்களுடைய மயிரைக் கத்தரித்துக் கொள்வது அவமானமாய் கருதப்பட்டது, அவர்களோ அதை செய்கிறார்கள். பெண்கள் முகொப்பனை (makeup) செய்து கொள்வது தவறானதாய் கருதப்பட்டது, அவர்களோ அதைச் செய்கிறார்கள், பெந்தெகொஸ்தேயினர் அதைச் செய்கிறார்கள். நான் சில நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரபலமான பெந்தெகொஸ்தே சபைகளில் ஒன்றுக்கு சென்றிருந்தேன். என்ன வந்து கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், நான் வெறுமனே சென்று, வார்த்தையைப் பிரசங்கித்தேன். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த நிலையில், ஏறக்குறைய அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வெளியே சென்றார்கள். ஞாயிறு பள்ளியை நடத்துவதற்குக் கூட போதுமானவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். அங்கே குட்டைத் தலைமயிர் கொண்ட பெண்களும், ரிக்கிகளும், எல்விஸ்களும், அவர்களனைவரும் இந்த வழியாகவும், அந்த வழியாகவும், வேறுவழியாகவும் எழுந்து சென்றார்கள். ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் இருந்தார்கள். நான், “அது ஒரு கூட்ட கோழிகள், நல்ல, புதிய மாம்சத்தை அவர்களால் தாங்க முடியாது'' என்றேன். அது சரி. நமக்கு பரிசுத்த ஆவி தேவை. கழுகுகள் கழுகினுடைய உணவை சாப்பிடுகிறது, கழுகுகள் பாரம்பரியத்தினால் வாழ்வதில்லை , அவைகள் பரிசுத்த ஆவியினால் ஜீவிக்கிறது, அவைகள் கிறிஸ்துவினால் ஜீவிக்கிறது. தேவனுடைய உண்மையான கழுகுகளாகிய அவைகள் விசேஷமாக பிறந்திருக்க வேண்டும். 64கோழி, “நானும் ஒரு பறவைதான்” என்று சொல்லுகிறது. நீ ஒரு பறவை என்று எனக்குத் தெரியும், அது சரிதான், ஆனால் கழுகல்ல. அவைகள் அதைக் கேட்பதில்லை, அவைகளால் அதைத் தாங்க முடியாது, அவைகளால் நிரம்ப முடியாது, அவைகளால் அதை எடுக்க முடியாது. ஏன்? அவைகளால் அதை எடுக்க முடியவில்லை , அதைக் குறித்து அவைகளுக்கு ஒன்றும் தெரியாது, நம்முடைய புனிதமான சபைகள், அவைகளை முடமாக்கிவிட்டன. நம்முடைய சபைகளானது நவீனமாக்கப்படுதலின் பேரில் முடமாக்கப்பட்டுவிட்டன; நாம் மகத்தான பெரிய அருமையான சபைகளைப் பெற்றிருக்கிறோம், மகத்தான பெரிய அருமையான அமைப்புகளையும், இறையியல் படிப்பில் டாக்டர் பட்டம் (doctors of divinity) பெற்ற பெரிய அருமையான மகத்தானவர்களையும் பெற்றிருக்கிறோம். நான் எப்போதாவது ஒரு முறை ஒரு சிறிய பெண் மீது மரியாதை கொண்டவனாயிருந்தால், அது ரோல்ப் மெக்பர்ஸனின் (Mr. Rolf McPherson) மனைவி சகோதரி மெக்பர்ஸன் ஆகும் (Mrs. McPherson). அவள் ஒரு சிறிய அன்பான கிறிஸ்தவளாயிருந்தாள். நான் கிறிஸ்தவ வியாபார புருஷர்களில் ஒருவருடன் காலை ஆகாரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் அங்கே உட்கார்ந்து ஆகாரத்தைப் பெற்றவர்களாய் பேசிக்கொண்டிருந்தோம். ஓ, அது இரவு உணவாயிருந்தது. வெகு காலத்திற்கு முன், சகோதரர் டீபோர்டு (Brother Teeford) என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, நீர் ஏன் எங்களைப் பார்க்க வரவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன்” என்றார். மேலும் சகோதரி மெக்பர்சன் ஒரு பண்டையகால பெந்தெகொஸ்தே வீட்டிலிருந்து வந்தவளாயிருக்கிறாள். அவளுடைய தகப்பனாரும், தாயாரும், அந்தப் பழைய பெந்தெகொஸ்தே முன்னோடிகளில் ஒருவராய் இருக்கிறார்கள். 65நான், “நல்லது'' என்றேன். அவர்கள் ஆலயத்தில் பெற்றிருந்த கொஞ்சம் குறைய, எல்லாவற்றையும் எடுத்து, ஒரு பெரிய சபையை நிறுவின மற்றொரு சகோதரனைக் குறித்து, அவர் இதுபோன்று செய்த எல்லாவற்றையும் குறித்தும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், ”இங்கே ஏற்கனவே கட்டின ஒன்றை பெற்றிருக்க, பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு சபையை அங்கே அவர்கள் கட்டப்போகிறார்கள் என்றால், இங்கே உள்ள சபைக்கு அது மிக மோசமான பாராட்டாயிருக்கிறது'' என்றேன். மேலும் நான், “அவர்கள் பசியாயிருக்கிறார்கள், பசியுள்ள பிள்ளைகள் குப்பைத் தொட்டியிலிருந்து சாப்பிடுகிறார்கள், அவ்வளவுதான்” என்றேன். நாங்கள் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, சகோதரி மெக்பர்சன் எழுந்து நின்று, அவள், “ரோல்ப், அது உண்மைதான்” என்றாள். அவள், “பிரயோஜனமற்ற (white elephant) பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள ஒன்றைத் தவிர எதை நாம் இங்கே பெற்றுள்ளோம்?” என்றாள். நான், “நீங்கள் சகோதரி மெக்பர்சன் நின்றதான சுவிசேஷத்திற்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு, மற்றும் இங்கே கற்பிக்கின்ற எல்லா வகையான பி.எச்.டி. எல்.எல்.டி., டாக்டர் (Ph.D., LL.D., Doctor) பட்டங்க ளுக்குப் பதிலாகத் தேவனுடைய வல்லமைக்குத் திரும்புவீர்களானால்...'' என்று கூறினேன். நாம் மறுபடியும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கும், சுவிசேஷத்திற்கும், பெந்தெகொஸ்தேவிற்கும் திரும்புவது அவசியம். ஆம், ஐயா. நீங்கள் வெளியே சென்று, அங்கே எல்லா வகையான குட்டைத் தலைமயிரைக் கொண்ட பெண் பிரசங்கிகளாகிய அவர்களைப் பாருங்கள், எப்படி அதைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது என்ன செய்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நான் இந்த தேசத்தில் அன்றொரு நாளில் சென்றபோது, நான் ஒருபோதும் கண்டிராத... நான் லாஸ் ஏஞ்சலஸ்-ல் இங்கே ஒரு பெண்ணைக் கண்டேன். நான் அவளுக்காக ஜெபிக்கச் சென்றேன். அவள் குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்தாள் என்று நினைத்தேன். ஆனால், நான் குஷ்டரோகத்தைக் கண்டிருக்கிறேன். அதைப் போன்று இது காணப்படவில்லை, கண்களுக்குக் கீழே பச்சை வர்ணமாகக் காணப்பட்டது. அதைப்போன்றே அனைத்துக் காரியங்களும் காணப்பட்டது. நான்... என்னே... நான் ஒருபோதும்... நான் அவளிடம் நடந்து சென்று, “பெண்ணே, நான் ஒரு மிஷனரி, நான் குஷ்டரோகத்தைக் கண்டிருக்கிறேன், நான் தோல்சுருக்க வியாதியைக் (Pellagra) (Pellagra) கண்டிருக்கிறேன், மற்ற எல்லா வியாதிகளையும் கண்டிருக்கிறேன், நான் ஒருபோதும் இது போன்று கண்டதில்லை, நான் ஒரு ஊழியக்காரன், உனக்காக ஜெபிக்க என்னை அனுமதிப்பாயா?' என்றேன். இவளைப் போன்றே காணப்படுகிற வேறொருத்தியும் அங்கே வருகிறாள். ”ஒரு நிமிடம் பொறுங்கள்“ என்று நான் நினைத்துக் கொண்டேன். (சபையார் சிரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்) 66அது என்னவாயிருந்தது? ஏன்? அது அவமானமாயிருந்தது. நீங்கள் காண்பதற்கு ஒரு லட்சணமான பெண்ணாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு வரலாற்றுக்கு முந்தைய உயிரினம் போன்று, மார்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றிலிருந்து வந்தவர்களைப் போன்று, காண சகிக்காத விசித்திரத் தோற்றத்தை கொண்டவர்களாக (freak) காணப்படக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பரிசுத்தவாட்டியாய் இருக்கிறீர்கள். உங்களில் அநேகர் பெந்தெகொஸ்தே பெண்களாயிருக்கிறீர்கள், தேவன் உங்களை எவ்விதம் உண்டாக்கினாரோ அதிலே தரித்திருங்கள். வெளிப்புறமானது, உட்புறத்தில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது, எனவே ஒரு பெண் வெளிப்புறமாக தவறு செய்யும் பொழுது, அது உட்புறத்திலுள்ள தவறாயிருக்கிறது. கிறிஸ்து அவளுடைய ஜீவியத்தை, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நிரப்புவதற்குப் பதிலாக, அவள் மனிதனால் உண்டாக்கப்பட்ட சில பாரம்பரியங்களையும் தவறான ஸ்தாபனத்தையும் பற்றிக் கொண்டிருக்கிறாள். வெளிப்புறமானது எப்போதும் உட்புறம் என்ன இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது, மரமானது அதனுடைய கனிகளால் அறியப்படும். ஓ என்னே! நான் ஒரு குறை கூறுபவன் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால், நான் குறை கூறுபவன் அல்ல, சத்தியமானது என்ன என்பதை உங்களுக்குக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு நம்முடைய சபைகள் எதைப் பெற்றிருக்கிறது என்றும், நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும் கவனித்துப் பாருங்கள். ஏன்? நம்முடைய சகோதரர்கள், ஸ்தாபனத்தைப் போன்ற அவ்விதமான காரியங்களை நினைத்திருக்க மாட்டார்கள், நம்முடைய தாய்மார்கள் அவ்விதமான காரியங்களை நினைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் சகோதரனுடைய ஆரம்ப நாட்களுக்குத் திரும்பச் சென்று, அதைக் குறித்து ஏதோவொன்றைச் சொன்னால், அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்து சிரிப்பார்கள். “தேவன் எங்களை வெளியே அழைத்தார், நாங்கள் அந்த சேற்றிலிருந்து வெளியே வந்திருக்கிறோம், நாங்கள் அந்த வாந்தியிலிருந்து வெளியே வந்திருக்கிறோம்” என்று நாங்கள் சொல்லுவோம். நாம் இஸ்ரவேலைப் போல மீண்டும் எகிப்தின் இறைச்சிப் பாத்திரங்களுக்கு திரும்ப விரும்பவில்லை. தேவன் நம்மை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தார், ஆனாலும் நாம் திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களாக இருந்தோம். நாம் திரும்பிச் சென்றோம், நாம் எதைப் பெற்றிருக்கிறோம், என்பதை நீங்கள் காண முடியும், சரியாக அவர்களைப் போலவே இருக்கிறோம், நாம் கொண்டிருக்கிற தவறுகளுக்காக நாம் மற்றவர்களைக் குறைகூறக் கூடாது (pot can't call kettle black). அது சரி. இரண்டு சாராருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை (six of one and half a dozen of the other one). பாரம்பரியங்களும், காரியங்களும் நம்மை பிரித்தது. ஆனால் சகோதரனே, ஓ! நான் நீண்ட நேரம் இதைக் குறித்து பேச முடியும், ஆனால் நாம் அதைச் செய்ய வேண்டாம். உங்களுக்கு நான் ஒரு நல்ல செய்தியைக் கொடுக்கட்டும்: இது யூபிலி ஆண்டாயிருக்கிறது. நீங்கள் அந்த வகையான விஷயங்களில் கலந்திருப்பவர்களாகக் காணப்பட்டால், திரும்பி வாருங்கள், நாம் சுதந்தரவீதத்தைப் பெற்றிருக்கிறோம். 67பெந்தெகொஸ்தே பிதாக்கள் பரிசை வெல்ல இரத்த சமுத்திரத்தினூடாக (bloody seas) பயணித்தார்கள். நாம் சில ஸ்தாபனங்களைச் சேர்ந்து, அதிலே தங்கியிருந்து, “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் பெந்தெகொஸ்தேயினன்” என்பதாக சொல்லிக்கொண்டு, எளிதாக மலர் படுக்கையின் மேல் நடக்காதிருக்கக் கடவோம். தேவனிடத்திற்குத் திரும்பிச் செல்வோம், கழுகின் உணவுக்கு திரும்பிச் செல்வோம், பரிசுத்த ஆவியினுடைய வழி நடத்துதலுக்குத் திரும்பிச் செல்வோம், தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பிச் செல்வோம், உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் திரும்பிச் செல்வோம். அப்படிப்பட்ட அனுபவத்தை நாம் பெறக்கடவோம். ஏன்? சபையானது நீண்ட காலத்திற்கு முன்பே தெருக் கூட்டங்களை மறந்துவிட்டது, சபையானது அதனுடைய தொடர் இரவு ஜெபக்கூட்டங்களை மறந்துவிட்டது. ஏன்? அவர்களால் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக ஜெபிக்க முடியவில்லை. ஓ! என்னே! அது சில வழக்கமான காரியங்களே. அதைச் செய்யும்போது, அதில் பாதி பேர் தூங்கி விடுகிறார்கள், ஏன்? அது ஒரு — அது ஒரு அவமானம்! கோழிகள் கழுகினுடைய உணவை உண்ண முயற்சிக்கிறது, உங்களால் அதை செய்ய முடியாது, அதை ஜீரணம் பண்ண முடியாது, அது சரி. நீங்கள் அதற்காக உண்டாக்கப்படவில்லை, நீங்கள் கடினமான பாகத்திற்காக கடினமாக உண்டாக்கப்படவில்லை. நீங்கள் உண்டாக்கப்பட்டிருக்கவேண்டும். அதைப் பெறக் கூடிய ஒரே வழி என்னவென்றால், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும், உங்கள் வழியை மாற்றி, நீங்கள் திரும்பி வாருங்கள், ஆமென். ஆம் ஐயா! ஆம் ஐயா! இது திரும்பி வருகிற நேரமாருக்கிறது. “சகோதரன் பிரன்ஹாமே, எதற்கு திரும்புவது? நான் வெளியே வந்த அந்த ஸ்தாபனத்திற்கே திரும்புவதா?” இல்லை, உங்களுடைய சுதந்தரவீதத்திற்கு திரும்பிச் செல்லுங்கள் நம்முடைய பிதாக்கள் நமக்கு விட்டுச் சென்ற அந்த சுதந்தரவீதத்திற்கு “எப்படி அவர் செய்தார்... என்ன வகையான சுதந்தரவீதத்தை அவர் நமக்கு விட்டு சென்றார்?” “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேமில் காத்திருங்கள்.” அது தான் சுதந்தரவீதமாயிருக்கிறது. 68“போய் இதில் சேர்ந்து கொள்ளுங்கள், போய் அதில் சேர்ந்து கொள்ளுங்கள், இந்த ஒன்றிலே சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்பதல்ல, உன்னதத்திலிருந்து பெலன் வரும்வரை காத்திருங்கள். எவ்வளவு காலம்? அது வரும் வரைக்கும், ஒரு நாளா? இரண்டு நாளா? அது வரும் வரைக்கும் காத்திருங்கள். சிறிதளவும் பதற்றமடைய வேண்டாம், சிறிதும் உணர்ச்சிவசப்பட வேண்டாம், நீங்கள் கிறிஸ்து இயேசுவில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மறுபடியும் புதிய ஒன்றாக பிறக்கும் வரை காத்திருங்கள். உங்களுடைய ஒவ்வொரு நாடித்துடிப்பும் இயேசு கிறிஸ்துவுக்காக துடிக்கும் வரை, சரியாக உங்களுடைய உங்களுடைய ஜீவியத்தில், நீங்கள் செல்கின்றதான வழியில் கிறிஸ்துவின் ஜீவன் பிரதிபலிப்பதைக் காணும் வரை, ஆம் ஐயா, ஆதியில் அவர்கள் கொண்டிருந்ததான வல்லமையை நீங்கள் காணும் வரை காத்திருங்கள். 69ஒரு பெந்தெகொஸ்தே சுதந்தரவீதத்திற்கு திரும்புங்கள். ஆம், ஐயா! அதுவே உங்களுடைய காணியாட்சியாயிருக்கிறது. ஸ்தாபனம் உங்கள் சுதந்தரமல்ல, பெந்தெகொஸ்தே தான் உங்களுடைய சுதந்தரம், உங்கள் பிதாக்கள் வெளியே வந்ததான பெந்தெகொஸ்தே என்கிற ஸ்தாபனம் உங்கள் சுதந்தரமல்ல. பெந்தெகொஸ்தே அனுபவமே உங்கள் சுதந்தரமாயிருக்கிறது. நம்மை நாமே நிதானித்து அறிவோம். எக்காளம் சத்தமிடுதல், எந்த வகையான எக்காளம்? வார்த்தை என்னும் தேவனுடைய எக்காளம், வார்த்தையிலுள்ள பரிசுத்த ஆவியானவர். ஓ! கவிஞன் அதைப் பாடும் பொழுது சரியாக அதை வெளிப்படுத்தினான். அவன்: தேசங்கள் உடைகிறது, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது, தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அடையாளங்கள், கொடூரத்தால் சூழப்பட்ட நாட்கள், புறஜாதி நாட்கள் எண்ணப்படுகிறது, ஓ! சிதறடிக்கப்பட்டவர்களே! திரும்புங்கள், மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது, பயத்தினால் மனித இருதயங்கள் சோர்ந்துபோகிறது, ஆவியினால் நிரப்பப்படுங்கள், உன் விளக்குத்திரி தீண்டப்பட்டு தெளிவாயிருக்கட்டும். 70நாம் இன்றைக்கு, அங்கே நின்று கொண்டும், பேசிக் கொண்டும், ஒரு சொட்டு வேர்வை கூட சிந்தாமல், ஒரு முடிகூட கலையாமல், அசையாமல் நிற்கிற, சிறந்த பிரசங்கிகளையும், நெறிமுறையாளர்களையும், கல்வி கற்றவர்களையும், சிறந்த அறிஞர்களையும் பெற்றிருக்கிறோம். ஓ, நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பதினைந்து நிமிடங்களுக்கு மிக அழகாக சபையினுடைய கட்டுரை மற்றும் மற்றவைகளை கொடுத்து, வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். நீங்களோ உங்களைப் பெந்தெகொஸ்தேயினர் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். சகோதரனே, வேலை செய்யும் போது அணிகிற மேலாடையுடன் (pair of overalls) வெளியே வந்து, தேவனுடைய வல்லமையுடன் அபிஷேகிக்கப்பட்டு, பிரசங்க பீடத்தை தட்டுகிற (அல்லேலூயா!), காட்டுப்பகுதியில் இருக்கிற அந்தக் கரடுமுரடான பிரசங்கியே நமக்குத் தேவை. அவர் ஐந்து நிமிடம் மாத்திரம் பிரசங்கிக்காமல், ஆவியானது சபையை ஆட்கொள்ளும் வரை பிரசங்கிப்பார். அது இரவு முழுவதும் மேலே உன்னதங்களுக்குள்ளாகச் செல்லுகிறது, அது கழுகாயிருக்கிறபடியால், அவர்கள் களஞ்சியத்தை அடுத்த முற்றத்தைச் சுற்றி கொத்தி கொண்டிராமல், தங்களுடைய உணவுக்காக வானங்களுக்குள்ளாக செல்கிறார்கள். 71சிதறடிக்கப்பட்டவர்களே! திரும்புங்கள், ஆம் ஐயா! இது எக்காள சத்தமாயிருக்கிறது. ஆனால், நீங்கள் உங்கள் சுதந்தரவீதத்தை விற்றிருந்தால், நீங்கள் விற்று, இப்படிப்பட்ட காரியங்களைச் செய்திருந்தால், (நான் சொல்லிக்கொண்டிருக்கிறது என்ன? திரும்புங்கள்!) மற்ற சகோதரருடைய ஐக்கியத்திலிருந்து உங்களை விலக்கி வைக்க முயற்சிக்கிற ஒரு வழிபாட்டு முறைமையில் (cult) நீங்கள் சேர்ந்திருந்தால் அந்தக் காரியங்களை விட்டு விலகுங்கள், இது யூபிலியாயிருக்கிறது. ஆமென். நான் பக்திப்பரவசப்படுகிறேன், திரும்புங்கள், திரும்புங்கள்! இது யூபிலியாயிருக்கிறது, இதைக் கடந்து செல்ல விடாதீர்கள். ஞாபகங்கொள்ளுங்கள்: இதைக் கடந்து செல்ல விடாதீர்கள். நீங்கள் அதை விற்றிருந்தால், ஒரு முறை நீங்கள் அனுபவத்தை உடையவர்களாயிருந்தீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள், தொடர்ந்து அதனோடு ஐக்கியத்தைத் தொடர முடியாத இடத்தில் போய் சேர்ந்து கொண்டீர்கள், நீங்கள் உலகத்திற்குள்ளாக சென்றிருந்தால், நீங்கள் பாவம் செய்திருந்தால், நீங்கள் இந்த எல்லாக் காரியத்தையும் செய்தீர்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நீங்கள் ஒரு குமாரனாயிருந்தால் நீங்கள் இப்பொழுது திரும்பிச் செல்ல உங்களுக்கு உரிமையிருக்கிறது, ஏனென்றால் இது யூபிலியாயிருக்கிறது, இது யூபிலி நேரமாயிருக்கிறது. 72ஆனால் நீங்கள் எங்கேயாவது மதில்சுவருக்குள்ளே குடியேறினவர்களாய், கோழிகளுக்கேற்ற அனைத்து தன்மைகளையும் பெற்றவர்களாய், உங்கள் பெயர்களை அங்கே பதிந்து, அங்கே நங்கூரமிடப்பட்டிருந்தால், நீங்கள் இதை ஒரு போதும் கேட்கப் போவதில்லை, ஆனபடியால் உங்களுக்கு மிகப்பெரிய காரியம் எதுவும் நடக்கப்போவதில்லை. நீங்கள் வெளியே சென்று “நல்லது, அது சரியானதுதான் என்று யூகிக்கிறேன், இதை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்” என்று சொல்கிறீர்கள். பாருங்கள்? வீட்டுக்கு சென்று, உறங்கி, அடுத்த நாள் காலை எழுந்திருக்கிறீர்கள், ஆனால் தேவனுடைய வார்த்தையினுடைய குற்றப்படுத்துதல் உங்களை உறங்க விடாது, நீங்கள் அதை உதறி விட முடியாது. நீங்கள் கழுகாயிருந்தால், நீங்கள் ஏதோ ஒன்றை பிடித்திருக்கிறீர்கள். இது மரியாதையற்ற விதமாய் தொனிக்கிறது, அந்த விதமான அர்த்தத்தில் அதை நான் உங்களிடம் கூறவில்லை. அவ்வாறு நம்புகிறேன்... நானும் அதை அந்த வழியில் அர்த்தம் கொள்ளவில்லை. முட்டைகளை அடைக்காக்க கோழியை வைத்திருந்த விவசாயியைப் போல, நல்லது அவன் கீழே வைக்க போதுமான முட்டைகளை உடையவனாயிருந்தான். ஒரு முட்டை குறைவாக இருந்ததை அடுத்து அவன் ஒரு கழுகு முட்டையை அதற்கு கீழே வைத்துவிட்டான். அந்த சிறிய கழுகு பிறந்த பொழுது, அது நீங்கள் பார்த்ததிலேயே வேடிக்கையான தோற்றம் கொண்டதாய் கோழி குஞ்சுகள் நடுவே காணப்பட்டது. அது ஒரு விநோதமான பறவையாயிருந்தது. எல்லாம் சரி. எனவே அது... அந்த வயதான கோழி 'களக்' என்று கொக்கரித்து அருகிலிருக்கிற எதையும் சாப்பிடும். ஆனால் அந்த சிறிய ஒன்றோ, அதற்கான உணவாக அது இருக்கவில்லை. அதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது அந்த கோழியின் 'க்ளக்' என்ற கொக்கரிப்பைக் கேட்கிறது. அது என்ன அர்த்தத்தைத் தருகிறது? “நிதி திரட்டும் இரவு உணவு (pie suppers), தேவாலய சமூக கூடுகை (church socials), நடனங்கள், சீட்டு அல்லது பகடை சூதாட்டங்கள் (buncos) போன்றவைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்.” பாருங்கள்? அது ஒரு கழுகாயிருக்கிறது, இந்த விதமான காரியங்கள் என்ன என்பதை அதனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 73ஒரு நாள், அந்த வயதான தாய் கழுகு, தன்னுடைய குஞ்சைத் தேடி வந்தது, அது கண்டிப்பாக, அந்த சிறிய கழுகுக் குஞ்சுக்கான யூபிலி ஆண்டாயிருந்திருக்க வேண்டும். அந்த வயதான தாய் அதற்கு மேலே வந்து, சத்தமிட்டது, அந்த சிறிய கழுகுக் குஞ்சு மேலே நோக்கிப் பார்த்து, “அந்த சத்தம் சரியாயிருக்கிறதே” என்று கூறியது, அது ஏதொவொன்றை கேட்டது. தாய் கழுகு, “மகனே, நீ ஒரு கோழி அல்ல, நீ ஒரு கழுகாயிருக்கிறாய், அதிலிருந்து வெளியே வா” என்று சத்தமிட்டது. அதற்கு கழுகுக் குஞ்சு, “அம்மா எப்படி அதிலிருந்து வெளியே வருவது” என்று கேட்டது. தாய்க்கழுகு, “வெறுமனே உன்னுடைய செட்டைகளை அடி. அதுவே தேவனால் கொடுக்கப்பட்ட உன்னுடைய விடுதலையாயிருக்கிறது. நீ ஒரு கழுகாக பிறந்திருக்கிறாய், உனக்கு ஒரு சுதந்தரவீதம் உண்டு. மேலே உயரே வா, அவ்விதமான காரியங்களிலிருந்து வெளியேறு, திரும்பி வந்துவிடு” என்றது. அது நான்கு அல்லது ஐந்து முறை செட்டைகளை அடித்தது, அது அதைச் செய்தபொழுது, தோட்டத்தில் ஒரு கம்பத்தின் மீது சரியாக அமர்ந்தது, பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் மத்தியில் அமர்ந்தது. தாய் கழுகாகிய அவள், “மகனே நீ அதைக் காட்டிலும் உயரமாகத் தாவ வேண்டும், இல்லையென்றால் நான் உன்னை பெற முடியாது'' என்றது. அடுத்த தாவலில் அது தன்னுடைய தாயினுடைய செட்டைகளின் மேல் அமர்ந்து, வானங்களுக்குள்ளாக சென்றது. சகோதரனே அது தான் இந்நாளின் அழைப்பாயிருக்கிறது, திரும்பி வாருங்கள். நீங்கள் கோழிக் குஞ்சுகள் அல்ல, நீங்கள் கழுகுகள், திரும்பி வாருங்கள். ஆம் ஐயா, அது சத்தியம் என்பதை இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். 74இப்பொழுது, எக்காளம் ஊதப்படுகிறது, அது ஒலித்துக் கொண்டிருக்கிறது, இது ஐம்பதாவது வருடமாயிருக்கிறது. அது என்னவாயிருந்தது என்று இந்த முற்பிதா இன்று காலையில் கொடுத்த இந்த செய்திகளின் மூலம் நீங்கள் கேட்டீர்கள். நான் இன்றிரவு உங்களுக்கு கூறுகிறதென்னவெனில், இப்பொழுதே அந்த வாக்குத்தத்தம் (the promise is now). நாம் திரும்பி செல்வோம், அப்போஸ்தல நடபடிகளில்... இல்லை, 1 கொரிந்தியர் 14:8-ல் பவுல், “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்” என்று கூறினான். இன்றைக்கு உலகத்தைச் சுற்றிவருகிற மகத்தான மனிதர்களை நாம் பெற்றிருக்கிறோம். எல்லா சபைகளும் ஒரு பெரிய அரசியல் இயந்திரத்தைப் போல ஒன்றாக ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் கொண்டவர்களைப் போல மக்கள் வெளியே வந்து அதற்குள் வருகிறார்கள். முதல் காரியம், மெத்தடிஸ்டுகள் தங்களுடைய காரியங்களை எடுத்துக் கொண்டு அந்த வழியில் போய் விடுகிறார்கள், பிறகு பாப்டிஸ்டுகள் தங்களுடைய காரியங்களை எடுத்துக் கொண்டு அந்த வழியில் போய் விடுகிறார்கள், ஒருவர் செய்வதை மற்றொருவர் அறியாதிருக்கிறார்கள். 75ஆனால், காரியம் அதுவல்ல! “வந்து இந்த பாரம்பரியத்தைச் சேர்ந்து கொள்ளுங்கள், வந்து அந்த பாரம்பரியத்தைச் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று எக்காளமானது விளங்காத சத்தமிடுகிறது, ஆனால் வேதாகமமோ வேறொன்றைக் கூறுகிறது, ஆம் ஐயா. எக்காளமானது, விளங்கக்கூடிய வகையில் ஒரு சத்தத்தை கொடுக்கவில்லையென்றால், அதற்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஆயத்தப்படுத்துவது என்பதை அறியீர்கள், உங்களால் ஆயத்தபட முடியாது. ஆனால், தேவ எக்காளமானது தேவனுடைய வார்த்தையை முழங்குவதை நீங்கள் காணும்பொழுது, தாம் செய்வதாக சொன்னபடியே அற்புத அடையாளங்களால் அதை நிரூபிப்பதைக் காணும்பொழுது, அதுவே சரியானதாயிருக்கிறது. அதுவே போதுமானதாய் இருக்கிறது. அந்த எக்காளமானது விளங்காத சத்தமிட்டால், தலைமைத் தளபதி அந்த அழைப்பை நிரூபிக்கமாட்டார். ஓ சகோதரனே! தலைமைத் தளபதி அந்த அழைப்பை நிரூபிக்கமாட்டார். மாற்கு 16-ம் அதிகாரத்தில் அவர் “உலகமெங்கும்; விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்றார். அது தான் அந்தத் தலைமைத் தளபதி. “என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள்.'' அல்லேலூயா! அது தான் அழைப்பாயிருக்கிறது. தலைமை தளபதி, ”இதன் மூலம் நான் அவர்களை உறுதிபடுத்துவேன்“ என்று கூறினார். மேலும் அவர், யோவான் 14:12-60 அந்த தலைமைத் தளபதி, ”என்னை விசுவாசிக்கிறவன்,“ தான் விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்பவனல்ல, ”என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்“ என்று கூறினார். ஆமென். அதுதான் அந்த விளங்குகிற சத்தமாயிருக்கிறது. அவர் அவர்களிடம்... அந்த யூதர்கள், “ஏன், நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் ஆக்குகிறாய்” என்றார்கள். அவர், “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை” என்று கூறினார். ஆமென்! நாம் ஒரு சபையாயிருக்கிறோம், நாம் அதை பெற்றுக் கொள்வோமாக. மகிமை! சரி. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” உங்கள் பிதாக்கள், டயர்களில் கம்பிகள் கட்டப்பட்ட பழைய டி-மாடல் போர்டு வாகனமாகிய அந்த திறந்த வகை உறுதியற்ற வண்டியில் (buggy), லூசியானாவில் மேலும் கீழுமாக சென்று, நீங்கள் இணைத்துக் கொண்ட இந்த கோட்பாடுகளுக்கெதிராகப் பிரசங்கித்தார்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள், திரும்புங்கள், திரும்பி வாருங்கள், மனந்திரும்புங்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அதற்கு திரும்பிச் செல்லுங்கள், இது யூபிலி ஆண்டாயிருக்கிறது. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” ஆம், ஐயா! 76ஓ, நான் இதை கூறட்டும்! இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நான் அறிவேன். ஐசுவரியமான லவோதிக்கேயா சபையாகிய நீங்கள், “எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று கூறினீர்கள். ஆனால் வேதாகமமோ, நீங்கள் அந்த விதமாக, அதாவது, “நீ வெதுவெதுப்பாயிருக்கிறாய்” என்று கூறினதை அறிந்திருக்கிறீர்கள். ஓ! “நாங்கள் சத்தமிட்டு தேவனை துதிக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம். ஓ, ஆம்! இஸ்ரவேலும் அதேக் காரியத்தைச் செய்து, பின்னர் அவ்வளவான ஒரு மோசமான தவறையும் செய்தது. ஆகவே காரியம் அதுவல்ல. ஆனால், பற்றி எரிகிற தேவனுடைய வைராக்கியத்தை நான் குறிப்பிடுகிறேன், எதுவும் அதை தடை செய்ய முடியாது. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில், அந்த முற்பிதாக்கள் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தலையசைவினிமித்தம், அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினிக்கு தப்பினார்கள், அவர்கள் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தலையசைவினால் (nod from God) விசுவாசத்தின் மூலமாக இந்த காரியங்களைச் செய்தார்கள். இன்றைக்கு தேவன் ஒரு பிரசங்கியை அனுப்பி, வார்த்தை என்னும் சுத்தியலைக் கொண்டு, கடினமாக அடிக்க முடியும், ஆனாலும் நாம் சென்று உறங்கி, எழுந்து, அப்படியே சென்று விடுகிறோம். நீங்கள் மதிலால் சூழப்பட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை, மதிலால் சூழப்பட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. இது பதிவு செய்யப்படுகிறது என்று எனக்குத் தெரியும். இது அநேக இடங்களுக்கு செல்கிறது. நீங்கள் பாருங்கள், இது உலகம் முழுவதும் செல்கிறது. நாங்கள் ஒலிநாடாவை உலகம் முழுவதிலும் விற்பனை செய்கிறபடியால், மிஷனரி ஊழியத்திற்காக இது வெளிநாடுகளுக்கு செல்கிறது. 77மேலும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன், ஆம் ஐயா, திரும்புங்கள். அழைப்பு வருகிற இத்தருணமே திரும்பக்கூடிய நேரமாய் இருக்கிறது. ஆம், ஐயா. இந்த அடையாளங்கள் குமாரர்களை பின்தொடரும், அடிமைகளை அல்ல, விலைப்பட்டவனை அல்ல, வேலைக்காரர்களை அல்ல, ஆனால் குமாரர்களைப் பின்தொடரும். “விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கிறிஸ்து என்று ஒருவனும் சொல்லக்கூடாது.” அது சரியே. நீங்கள் அவ்விதம் செய்வதாகக் கூறலாம், ஆனால் பரிசுத்த ஆவியே அதை நிரூபித்து உறுதிபடுத்த வேண்டும். ஆம், ஐயா. 78ஓ, கதவை தட்டிக்கொண்டும், உள்ளே முயற்சித்துக்கொண்டும் இருக்கிற வகையில், கிறிஸ்துவை சபைக்கு வெளியே இருக்கப் பெற்றிருக்கிறதான நிலையில், அவரை சபைக்குப் புறம்பாக்கின ஐசுவரியமான லவோதிக்கேயா, “நான் ஐசுவரியவான், எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று கூறினது. நிச்சயமாகவே, நீங்கள் மெத்தடிஸ்ட்டுகள் மற்றும் பாப்டிஸ்டுகளுக்கு இணையாக வந்து, எண்ணிக்கையில் அவர்களையும் மிஞ்சி விட்டீர்கள், ஆனாலும் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக விழுந்த தேவனுடைய வல்லமை எங்கே? இரயில் தண்டவாளங்களில் நடந்து சென்று, சோளத்தைப் பொறுக்கி, அதை அரைத்து சாப்பிட்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கித்த, அந்த மக்களுடைய இருதயங்களில் எரிந்து கொண்டிருந்த அந்த வைராக்கியம் எங்கே? அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நம்முடைய செய்கை அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் (we make them turn over in their graves). பரிசை வெல்வதற்காக போராடின நம்முடைய தகப்பன்மார்களுக்கும், தாய்மார்களுக்கும், நாம் அவமானத்தைக் கொண்டு வருகிறோம். இங்கே ஸ்தாபனங்களைச் சுற்றிலும் சொகுசாக இருக்கிற நாம்... நான் உங்களுக்கு புரிந்து கொள்ளுதலை கொடுக்க போதுமான அளவு கூறியிருக்கிறேனா? இது திரும்புதலாயிருக்கிறது. 79ஐம்பது வருடங்களுக்கு முன்பாக தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட சபையை ஸ்தாபனங்களிலிருந்து இழுத்துக்கொண்டார். தேவனே, மீதியானவர்களையும் வெளியே இழுத்துக்கொள்ளும்! இது யூபிலியாயிருக்கிறது, அவர் மீண்டுமாக அழைத்துக் கொண்டிருக்கிறார். திரும்புங்கள், யூபிலி! ஐம்பது வருடங்களுக்கு முன்பாக தேவன் அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தவராய், இன்றிரவு அவர் அதை மீண்டும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நாளை இரவு நாம் தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பதினைந்து நிமிடம் தாமதமாகி விட்டது. நம்முடைய தலைகளை வணங்குவோம். தேசங்கள் உடைகிறதும், (கிறிஸ்து எங்கும் இருக்கிறார்.) இஸ்ரவேலின் விழித்தெழுதலும், (அவள் தன் சொந்த தேசத்தையும், சொந்த செலாவணியையும் (own money), தன் சொந்த ராணுவத்தையும் பெற்றிருக்கிறாள், ஐக்கிய நாடுகளிலும் இருக்கிறாள்). வேதம் முன்னுரைத்த அடையாளங்கள், தீங்கு நிறைந்த நாட்களோடு புறஜாதி நாட்கள் எண்ணப்படுகிறது, (அணுகுண்டுகள் மற்றெல்லாம்). ஓ, திரும்பிச் செல்லுங்கள், புறக்கணிக்கப்பட்டவர்களே! உங்களுடைய சுதந்தரத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். (இது யூபிலி ஆண்டாயிருக்கிறது.) மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது, மனிதனுடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகிறது; ஆவியினால் நிரப்பப்பட்டிருங்கள், உன் விளக்குத்திரி தீண்டப்பட்டு தெளிவாயிருக்கட்டும், மேலே நோக்கிப் பாருங்கள்! உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது. 80“திரும்பு,திரும்பு.” பரிசுத்த ஆவியானவர், “திரும்பு” என்று கூக்குரலிடுகிறார் (cries). இயேசு எருசலேமை நோக்கிப் பார்த்து அழுததை என்னால் சிந்தித்துப் பார்க்க முடிகிறது, அவர் அதை நேசித்தார், அவர்கள் அவரை புறக்கணித்து விட்டனர். இன்றிரவு, ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனால், தேவனுடைய மகிமையான வல்லமையினால் பிரகாசிக்கப்பட்டிருக்க வேண்டிய சபையையும் ஒரு கூட்ட மக்களையும் அவனால் நோக்கிப் பார்க்க முடியும், உங்கள் இருதயத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் விசனத்தினால் கண்ணீர்விட்டு அழுகிறார். நாம் என்ன செய்திருக்கிறோம்? தேவன் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக நம்மையும், நம்முடைய பிதாக்களையும் அழைத்தார், நாம் திரும்பி வந்தோம். மேலும் நாம் பெற்றிருக்கிறதாக நீங்கள் காண்கிறது என்னவெனில், பெந்தெகொஸ்தே என்ற பெயரின் கீழாக, புகைபிடிக்கிற, மதுபானம் பண்ணுகிற, மூன்று அல்லது நான்கு முறை திருமணம் செய்கிற ஜனங்களையும், பெந்தெகொஸ்தே சகோதரிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற பெண்கள், தங்களுடைய மயிர்களை கத்தரித்துக்கொண்டும், முகத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டும், குட்டைக்கால் சட்டைகள் மற்றும் ஒழுக்கமற்ற ஆடைகளை உடுத்துவதும் மற்றும் எல்லாவற்றையும் செய்கிறார்கள். கிறிஸ்துவின் நாமத்திற்கு என்னே ஒரு அவமானம்! அவருடைய சபையின் மீது என்னே ஒரு அவமானகரம். பாபிலோனிலே தூஷணமான நாமங்கள் காணப்பட்டது என்று அவர் சொன்னதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, அங்கே ஸ்தாபனங்களும், குழப்பமும், அனைத்து குழப்பங்களும் ஒருங்கேற, எல்லாவகையான இந்த, அந்த மற்றும் அனைத்தும் அங்கிருக்கின்றன. இந்த முழுக்காரியத்திலும் கிறிஸ்து எங்கே இருக்கிறார்? ஜனங்களே! திரும்புங்கள். 81நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் வேளையில், இந்த யூபிலியில் நாம் திரும்பியாக வேண்டும் என்பது சத்தியமாயிருக்கிறது என்பதை ஜனங்கள் விசுவாசிப்பார்களா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இது அவருடைய சபைக்கு தேவனுடைய கடைசி அழைப்பாயிருக்கிறது. நீங்கள் செய்வீர்களென்றால், கரங்களை தேவனிடத்தில் உயர்த்தி, “தேவனே, நான் வர விரும்புகிறேன்” என்று கூறுங்கள், இதை அறிந்து விசுவாசிக்கிற எல்லா கழுகுகளும் உங்கள் கரங்களை வெறுமனே உயர்த்தி, “நான் அதை விசுவாசிக்கிறேன், நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். எங்களுடைய பரலோக பிதாவே, நீர் இந்தக் கரங்களை காண்கிறீர், ஏறக்குறைய இவர்களில் பாதி அல்லது அதற்கு அதிகமானோர் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். அவர்கள் இது சத்தியம் என்பதை அறிந்திருக்கின்றனர். பரலோகத்தின் தேவனே, பரிசுத்த ஆவியை அனுப்பும், கர்த்தாவே. நேரமானது இருள் சூழப்படுகிறதை நான் காண்கிறேன், மனிதனுடைய இருதயம் வெதுவெதுப்பாயும், குளிராயும் வளர்ந்து கொண்டிருக்கிறது, சபையானது புறம்பே சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் பெந்தெகொஸ்தே அசைவில் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக அவர்கள் அறிந்திருந்த வல்லமையை, அன்பை, வைராக்கியத்தை, அவர்கள் அறியாதிருக்கிறார்கள். யூபிலியில் வெளியே வரமுடியாதபடிக்கு அவர்கள் தங்களுக்கு அறைகளையும், தங்களைச் சுற்றி மதில்களையும் கட்டிக்கொண்டார்கள். ஒரு போதும் இவ்வாறு இருந்ததில்லை. 82தேவனே, நீர் மாறாத தேவனாயிருக்கிறீர், எல்லா நேரத்திலும் நீர் உம்மை மாறாதவராக காத்துக்கொள்ளுகிறீர், உம்முடைய நியமங்கள் மாறாதவைகள், ஒவ்வொரு தீர்மானமும் பரிபூரணமாயிருக்கிறது, எனவே அதை மாற்றியமைக்க வேண்டியதில்லை. அது பரிபூரணமாயிருக்கிறது, அது உம்முடைய வார்த்தையாயிருக்கிறது. இன்றிரவும் அது அவ்விதமே இருப்பதாக, கர்த்தாவே, எங்கும், உம்முடைய ஊழியக்காரர்கள், தேவனுக்குப் பயப்படுகிற அநேக மனிதர்கள், கர்த்தாவே, தேசத்தைச் சுற்றி எங்கிலும் இந்நாட்களில் நின்றுகொண்டு, “திரும்புங்கள், திரும்புங்கள்' என்று பிரசங்கித்துக் கொண்டிருப்பவர்களாக காணப்படுவார்களாக. சபைக்கு வருகைதரும் ஊழியக்காரர்கள் (visiting ministers), ஆண்களும் பெண்களும் செய்கின்ற, நடந்து கொள்கின்ற விதத்தைக் காணும் பொழுது, சங்கடத்தால் அவர்களுடைய முகங்கள் சிவக்கிறது. ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிற, தங்கள் முகங்கள் சிவந்த ஊழியக்காரர்கள், (காரியங்களை) அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அதைக்குறித்து அவர்கள் ஏதாகிலும் சொன்னால், அந்த ஸ்தாபன அமைப்பு அவர்களை வெளியே தள்ளிவிடும். ஓ தேவனே, அங்கிருந்து கழுகுகளை வெளியே கொண்டு வாரும், கர்த்தாவே, அந்த கூண்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வாரும். இது யூபிலியாயிருக்கிறது. அவர்களை சுதந்திரத்திற்கும் (freedom), பரிசுத்த ஆவியினிடத்திற்கும் கொண்டு வாரும். அவர்கள் நிற்கட்டும், ஜீவிக்கட்டும் அல்லது மரிக்கட்டும். நம்முடைய பிதாக்கள், மெத்தடிஸ்ட், பாப்டிஸ்டுகள், லுத்தரன் சபைகளிலிருந்து வெளியேறின பிறகு, அவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டு விற்று போட்டார்கள். தேவனாகிய கர்த்தாவே, நீர் உம்முடைய கழுகுகளை அந்த பட்டியிலிருந்தும், அந்த கொல்லை புறத்திலிருந்தும் வெளியே அழைத்தீர். இன்றிரவும், நீர் அதே தேவனாய் இருக்கிறீர். கர்த்தாவே, மீண்டும் அழைப்பியும், இது யூபிலி நேரமாயிருக்கிறது. 83பரலோக பிதாவே, இதை அளியும், இந்த வாரம் முடிவதற்கு முன்பாக, தேவனுடைய வல்லமையானது மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும் திரும்ப அளிப்பதைக் காணவும், வியாதியஸ்தர் சொஸ்தமடைவதையும், முடவர்கள் நடந்து செல்வதையும், ஊனமுற்றவர்கள் நடப்பதையும், குருடர் காண்பதையும், செவிடர் கேட்பதையும், மரித்தோர் எழுந்திருப்பதையும், தேவனுடைய வல்லமை இருதயங்களில் ரூபகாரப்படுவதையும் காண அருள் செய்யும். மீண்டும் ஒரு எழுப்புதலை துவங்கும் கர்த்தாவே! ஜனங்களை அவர்கள் செய்கின்ற குளிர்ந்த வெதுவெதுப்பான காரியங்களிலிருந்து வெளியே கொண்டு வாரும், ஒரு சிறிய இசையை இசைத்து, நடனமாடி, இசையினுடைய இராகத்தின் மூலம் ஆவிக்குள்ளாக இருப்பதாக அழைத்து கொள்கிறார்கள். ஓ தேவனே, ஒரு தேவனுடைய பரிசுத்தவான் வீதிகளில் மேலும் கீழுமாக நடனமாட முடியும், அல்லது மதுபான அறைகளில் அல்லது வேறெங்கும் தேவனைத் துதித்து, சத்தமிட்டு, தேவனுடைய வல்லமையின் கீழ் ஆவியுடன் அவன் நடனமாட முடியும், அவர்களை... அது அவர்களை வெளிப்புறத்தில் வித்தியாசமாக வாழச் செய்கிறது. கர்த்தாவே, உம்முடைய சபையானது அதன் உட்புறம் என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்துகிறது, வெறுமையும், ஆழமற்றதும், பாரம்பரியங்கள், ஸ்தாபனங்கள், சீர்குலைவுற்றதும், சுற்றிலும் வீரியமாக பரவக்கூடியதும், அரித்து தின்று கொண்டிருக்கிறதும், நிச்சயமாகவே அது ஒரு அழுகிய புண்ணாயிருக்கிறது. 84தேவனே, வார்த்தையைப் போதித்த கிறிஸ்துவாகிய பலியுடனே, இன்றிரவு பொற்பலிபீடத்தின் மேல் செலுத்தும் என்னுடைய காணிக்கையை நீர் ஏற்றுக்கொள்ளுமாறு நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆவியானது சபையை மீண்டும் திரும்ப கொண்டுவரட்டும் என்று நான் அழைக்கிறேன். பிதாவே, இதை அருளும். நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்த வார்த்தைகளை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். நான் ஒப்புவிக்கிறேன்... இந்த சபையை உமக்கு ஒப்புவிக்கிறேன். நான் இந்த ஜனக்குழுவை உமக்கு ஒப்புவிக்கிறேன். ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்காக ஏதோவொன்றைச் செய்யும். உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்திற்கு செவிகொடும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். இதை நான் உத்தமமாக முழு இருதயத்துடன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 85நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? இது திரும்பி செல்லுவதற்கான நேரம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் இப்பொழுது ஒரு சுகமளிக்கும் ஆராதனையை துவங்க மிகவும் தாமதமாயிருக்கிறோம். மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் நாளை இரவு அதை வைத்துக் கொள்வோம். நான் இதன் பேரிலேயே சிறிது நேரம் பேச விரும்புகிறேன். நான் பைத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் பைத்தியம் அல்ல, இல்லை .. நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைச் சரியாக அறிந்திருக்கிறேன், அது சத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன். சபையானது முற்றிலும் அழுகியிருக்கிறது (rotten to the core). அது சரியே. அவள் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம், அவள் தன்னுடைய சுதந்தரத்திற்கு திரும்பி வருவது அவசியம். அவள் பெந்தெகொஸ்தேவிற்கு திரும்பி வருவது அவசியம், அவள் ஏதோவொன்றிற்குத் திரும்பி வருவது அவசியமாயிருக்கிறது. ஓ, “நான் ஒரு பெந்தெகொஸ்தேயினன்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஓ, சகோதரனே, நான் என்னை பெந்தெகொஸ்தேயினன் என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படுகிறேன், பெந்தெகொஸ்தே என்னும் பரிசுத்த பெயரின் காரணமாக அல்ல, ஆனால் நான் வித்தியாசப்பட்டவனாக இருக்கக்கூடும் என்பதனால். நான் என்னுடைய சொந்த ஜீவியத்தை சரணடையச் செய்ய விரும்புகிறேன். நான் என்னையே தேவனுடைய பலிபீடத்தின் மேல் வைத்து, “கர்த்தாவே, இப்பொழுது நான் இருக்கிற நிலையிலிருந்து வித்தியாசமாக மாறும் வரை என்னை எடுத்து, அடித்து, வனைந்து, என்னை உம்முடையவனாக மாற்றி, என்னை வழிநடத்தும். கர்த்தாவே, நான் மனிதர்கள் மூலமாக அதிகமாக நடத்தப்பட்டிருக்கிறேன், நான் தேவனுடைய ஆவியின் மூலமாக வழிநடத்தப்பட விரும்புகிறேன். இது பெந்தெகொஸ்தேவாக இருக்கிறது என்று நான் அறிக்கையிடுகிறேன். நான் ஒரு எழுப்புதலைக் காண, மீண்டும் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்” என்று கூற விரும்புகிறேன், ஆமென். 86நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை நம்முடைய கரங்களை உயர்த்திப் பாடுவோம்.. சகோதரிகளே, இப்பொழுது நீங்கள் அந்தப் பாடலுக்கு ஒரு சுரத்தைக் கொடுத்தால், எல்லாம் சரி. எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தி உரத்த சத்தமாகப் பாடுங்கள். நான் அவரை நேசிக்கிறேன். நாம் அவ்வாறு பாடும்பொழுது நாம் எழுந்து நிற்போம். இப்பொழுது எல்லாருமாக சேர்ந்து, நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள், நாம் உண்மையான பெந்தெகொஸ்தேயினர்களாக இருப்போமாக. நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது நாம் அதின் ராகத்தை முனங்கி பாடுவோம். இப்பொழுது உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற ஒரு மெத்தடிஸ்ட், ஒரு பாப்டிஸ்ட், ஒரு பிரஸ்பிடேரியன், ஒரு பெந்தெகொஸ்தேயினனிடம், ஒருவரையொருவர் கரங்களை குலுக்கி, “சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நாம் திரும்பிச் செல்வோம்” என்று கூறுங்கள். நாம் திரும்பி ஒவ்வொருவரும் கரங்களை குலுக்கும் போது, அவ்வாறு சொல்லுவோம். 87நாம் ஒன்று சேர்ந்து இதைச் சொல்லட்டும்: “நாம் திரும்பக்கடவோம், நாம் திரும்பக்கடவோம், நாம் திரும்பக்கடவோம், நாம் திரும்பக்கடவோம்.” சகோதரன் ஹோல்ஸ்டீன் (Brother Holstein), “நீர் சரியாக அசூசா வீதியை பிரசங்கித்தீர்” என்றார். ஆமென்! நாம் திரும்பக்கடவோம்! நான் அவரை நேசிக்கிறேன் (நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோம்). நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இயேசுகிறிஸ்துவின் இரத்தம்: ஓ, விலையேறப் பெற்ற ஊற்றே என்னை பனிபோல வெண்மையாக்கினததுவே வேறெந்த ஊற்றும் நானறியேன் அது இயேசுவின் இரத்தமே நான் எந்த ஸ்தாபனத்தையும் அறியேன், நான் ஒன்றுக்கும் கடன்பட்டிருக்கவில்லை, ஆனால் நான் முழுவதும் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். இயேசு அனைத்தையும் செலுத்திவிட்டார் அவருக்கு நான் முற்றிலும் கடமைப்பட்டிருக்கிறேன் சிவேரென்ற கறையை பாவம் விட்டு சென்றது உறைபனி வெண்மையாக அவர் அதை கழுவினார் நான் அவரை நேசிக்கிறேன் (நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி அவரை துதிப்போம்) நான் அவரை நேசிக்கிறேன் (உமக்கு நன்றி, பிதாவே உமக்கு நன்றி) (உம்முடைய பரிசுத்த ஆவியை வேண்டிக்கொள்ளுகிறேன்) அனுப்புமாறு, ...நேசித்ததால்... (ஓ, தேவனே எங்களை அந்த அனுபவத்திற்கு திரும்பக் கொண்டு வாரும், கர்த்தாவே, பரிசுத்த ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்) …சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 88இசையானது தொடர்ந்து இசைக்கப்படுகையில், நம்முடைய கரங்களை உயர்த்திய வண்ணம் இருப்போமாக. அவரை நேசிப்போம், அவரை துதிப்போம், நம்முடைய சொந்த வழியில் ஜெபிப்போம், சபையில் நீங்கள் ஜெபிக்கிற விதமாக ஜெபியுங்கள். ஒரு புதிய ஞானஸ்நானத்தை பெற விரும்புகிறவர்கள் எழுந்து உங்கள் கரங்களை முன்னும் பின்னும் அசைத்து, “கர்த்தாவே எனக்கு ஒரு புதிய ஞானஸ்நானம் தேவையாயிருக்கிறது” என்று கூறுங்கள். இயேசுவை ஸ்தோத்தரியுங்கள். ஓ, தேவனே! தேவனே, பரிசுத்த ஆவியை எங்கள் மேல் அனுப்பும். கர்த்தாவே, எங்களை மீண்டும் திரும்ப அந்த அனுபவங்களுக்கு கொண்டுசெல்லும். கர்த்தாவே, எங்களுடைய மீறுதல்களை மன்னித்து, சுவிசேஷ சத்தியத்திற்கும், வல்லமையின் ஞானத்துக்கும் திரும்பி வர எங்களுக்கு உதவிசெய்யும். இதை அருளும் கர்த்தாவே. ..என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் சரியாக நீங்கள் நிற்கும் இடத்தில், சரியாக உங்கள் சொந்த வழியில், சரியாக நீங்கள் நிற்கும் இடத்தில், தேவனைத் துதித்து, “தேவனே, இப்பொழுதே நான் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறேன், அவ்விதமான அனுபவத்திற்கு என்னுடைய ஆத்துமா திரும்பும் வரைக்கும் நான் தளர விடமாட்டேன் என்று சரியாக இப்பொழுது உறுதியளிக்கிறேன்” என்று கூறுங்கள். எத்தனை பேர் என்னோடு கூட அவ்விதமாக செய்வீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். “நான் பலிபீடத்தைப் பிடித்திருக்கிறேன், நான் தளரமாட்டேன்.” நான் அவரை நேசிக்கிறேன் நான்... (“நான் துதிப்பேன்! நான் துதிப்பேன்! நான் எதையும் செய்வேன், கர்த்தாவே! என்னை திரும்ப என்னுடைய இடத்துக்கு என்னைக் கொண்டு வாரும், என்னுடைய அசலான இடத்திற்கு மீண்டும் கொண்டு வாரும்.”) ... என்னை நேசித்ததால்... (தேவனை துதியுங்கள்!) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 89ஓ! கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. ஓ, தேவனே, உம்முடைய வல்லமையை அனுப்பும். உம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பும், கர்த்தாவே, வார்த்தையோடு அவர்களை அனுப்பும், அவர்கள் எதனோடும் சமசரம் செய்து கொள்ளாதிருப்பார்களாக. வேதாகமத்திற்கு திரும்ப அனுப்பும், பரிசுத்த ஆவிக்கு திரும்ப அனுப்பும், வைராக்கியத்திற்கு திரும்ப அனுப்பும். கறைதிரையற்ற ஒரு சபையை எழுப்பும், நீர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர், கர்த்தாவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். எனக்காகவும் எங்கள் ஒவ்வொருவருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். ஓ, கர்த்தாவே, அதை அனுப்பும். இப்பொழுதே வல்லமையை அனுப்பி ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும். கர்த்தாவே, ஐம்பது வருடங்களுக்கு முன்பாக இந்த மாகாணத்தில் நீர் பொழிந்தருளின, எங்களுக்கு தேவையாயிருக்கிற அதை நீர் எங்களுக்கு அனுப்பும்படி கர்த்தாவே உம்மை நான் வேண்டிக்கொள்ளுகிறேன். மீண்டும் அதை ஊற்றும். ஓ, தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கொள்கலன்களை நிரப்பி எங்களுடைய இருதயங்களில் கிறிஸ்துவின் அன்பை ஊற்றியருளும், மற்றும் எங்கள் பாவங்களை மன்னித்து, நாங்கள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட சபையாக எங்களை உருவாக்கும். 90கர்த்தாவே, நாங்கள் ஒரு கூட்ட மக்களாக, ஒரு ஜனமாக, தனிப்பட்ட நபராக இன்றிரவு நாங்கள் திரும்புகிறோம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய எங்களுடைய இடத்திற்கு, கர்த்தாவே, நாங்கள் திரும்பிச் செல்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர், அதைக் கனப்படுத்தும், கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை கனப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். நான்.... (ஓ தேவனே, ஓ தேவனே, பரிசுத்தமும், நீதியும், தேவனுடைய சந்ததியும், அவருடைய ஜனங்களின் துதிகளை சுதந்தரித்துக் கொள்வார்கள்.) ...என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 91நீங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருக்கும் பொழுது, இந்த அன்பான வயதான விசுவாச முற்பிதாவை... நாங்கள் பேசிக் கொண்டிருந்ததான இந்த காரியங்கள், சகோதரனே நீங்கள் எல்லாரும் அநேக வருடங்களுக்கு முன்பாக இதற்காக சண்டையிட்ட காரியங்களாக இருக்கிறது. [அந்த சகோதரன், “முற்றிலுமாக” என்கிறார்.] சபையானது அதற்குத் திரும்ப வேண்டும், அவ்விதம் நீங்கள் கூறவில்லையா சகோதரனே? [“நாம் அதிலிருந்து விலகி விட்டவர்களாய்.... அந்த அசைவைக் காப்பாற்ற, நாம் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்.”] ஆமென் [“நாம் மற்ற எல்லா ஸ்தாபனங்களின் வழியில் சென்றுள்ளோம், தொடங்கும் போது அது அருமையானதாக இருந்தது, படிப்படியாக மனித மேதைகளாக இருக்கின்ற அவர்களின் பிடியில் அவைகள் விழுந்துவிட்டது. நாம் ஆவிக்குத் திரும்ப வேண்டும், நாம் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்.”] இந்த அன்பான வயதான பரிசுத்தவான் அப்படியே முகத்தில் வழிந்து ஓடுகிற கண்ணீ ருடன் அவருடைய இருதயத்திலிருந்து வருகிற கதறலை கேளுங்கள், பலிபீடத்தின் பின்னால் அங்கே ஆத்துமாக்கள் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். 92ஒரு நாளில் இயேசு வருவார். திரும்பச் செல்லக்கூடிய, எல்லாவற்றையும் கடந்து திரும்பச் செல்லக்கூடிய ஆண்களையும் பெண்களையும் தேவன் இங்கே எழுப்புவார் என்று நம்புகிறேன், ஜெபிக்கிறேன். திரும்புங்கள்! இது யூபிலியாயிருக்கிறது! இந்த இயந்திர அமைப்பிலிருந்து வெளியே வாருங்கள், அங்கே தேவனுக்காக நீங்கள் எதையும் சாதிக்க முடியாது, நீங்கள் ஒரு ஸ்தாபனத்திற்கு மாத்திரமே சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வெளியே வந்து தேவனுக்காக சாதிப்போம். பரிசுத்த ஆவியாகிய அவருடைய இயந்திரத்தின் மூலம் மாத்திரமே நீங்கள் அதைச் செய்ய முடியும், அதுதான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!